இழுத்து மூடப்படும் வோடஃபோன் -ஐடியா கம்பெனி: பரிதவிக்கும் 27 கோடி வாடிக்கையாளர்கள்

SHARE

பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான வோடஃபோன் – ஐடியா நிறுவனம் கடன் சுமையால் திண்டாடி வருவதால் திவாலாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான வோடஃபோன் – ஐடியா நிறுவனத்திற்கு நாடு முழுவதும் 27 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். கிட்டத்தட்ட 10,000-க்கும் மேற்பட்டோர் அந்நிறுவனத்தில் பணி புரிந்து வருகின்றனர்.

இதனிடையே வோடஃபோன் – ஐடியா நிறுவனம் மத்திய அரசுக்கு மட்டுமே ரூ.1.5 லட்சம் கோடிக்கு மேல் பணம் செலுத்த வேண்டியுள்ளது.

இதைத் தவிர வங்கிகளிடமிருந்து பெறப்பட்டுள்ள ரூ.23 ஆயிரம் கோடி கடனுக்கான வட்டியையோ அல்லது அசலையோ திரும்ப செலுத்தவும் வழி தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறது.

தற்போது அந்நிறுவனத்திடம் ரூ.350 கோடி ரொக்கம் மட்டுமே கையிருப்பில் உள்ளதாகவும், தற்போதைய நிலையில் நிறுவனத்தை தொடர்ந்து நடத்த முடியாத நிலையில் உரிமையாளர்கள் இருப்பதாகவும் அரசுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் வோடபோன் நிறுவனம் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இருந்தே ரூ.25,000 கோடியை கடன் மூலமாக திரட்ட வோடஃபோன் – ஐடியா நிறுவனம் முயற்சி செய்து வருகிறது. ஆனால் இதுவரை அந்த தொகைக்கு ஏற்பாடு செய்ய உரிமையாளர்களால் இயலவில்லை என கூறப்பட்டுள்ளது.

மேலும் நிறுவனத்தின் பங்குகளும் இந்திய பங்குச் சந்தைகளில் பெரும் சரிவை சந்தித்து ஒரு பங்கு வெறும் ஆறு ரூபாய்க்கு விற்கப்படும் அவலநிலை உருவாகியுள்ளது.

இத்தகைய நிலையில், வோடஃபோன் – ஐடியா தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு மேலும் கடன் வசதி அளிக்க இந்திய வங்கிகள் தயங்குகின்றன என்பதால் இந்த நிறுவனம் விரைவில் திவாலாகிவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஒருகாலத்தில் இந்தியாவில் 14 டெலிகாம் சேவை நிறுவனங்கள் இருந்த நிலையில், தற்போது பல நிறுவனங்கள் படிப்படியாக திவாலான நிலையில் தற்போது மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான வோடஃபோன் ஐடியாவும் கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த நிறுவனத்தில் 26 சதவிகிதம் பங்குக்கு உரிமையாளராக உள்ள குமார் மங்கலம் பிர்லா, எனது பங்குகளை நான் இலவசமாக அரசு தொலைத்தொடர்பு நிறுவனங்களான பிஎஸ்என்எல் – எம்டிஎன்எல் வசம் கொடுத்து விடுகிறேன்.

அரசு வோடஃபோன் – ஐடியா நிறுவனத்தை எடுத்து நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பிஎஸ்என்எல் – எம்டிஎன்எல் டெலிகாம் நிறுவனத்தையே வெற்றிகரமாக நடத்த அரசு திணறும் நிலையில் இந்த கோரிக்கை சாத்தியப்படுமா என்பது சந்தேகம் தான்.

இதன்மூலம் 27 கோடி வாடிக்கையாளர்கள் பரிதவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தேர்தல் விளம்பரங்கள்: சமூக ஊடகங்களுக்கு என்ன நிபந்தனை?

Pamban Mu Prasanth

வெளியானது தமிழின் முதல் கணிப்பான் செயலி!.

இரா.மன்னர் மன்னன்

இனிமே இன்ஸ்டாகிராம் ஸ்டோரியிலேயே லைக்.. புதிய அப்டேட் இதோ..!!

Admin

ட்விட்டர் நிறுவனம் மீது போக்சோ வழக்கு .. காரணம் என்ன?

Admin

அசத்தலான அம்சங்களுடன் வெளியாகும் ஒன்-பிளஸ் ஸ்மார்ட்போன்…!

Admin

இத்துடன் யாகூ செய்திகள் நிறைவடைந்தன..

Admin

பெகாசஸ் என்றால் என்ன? யார் உருவாக்கியது எப்படி வேலை செய்கிறது?

Admin

இந்தியாவின் மோசமான மொழி எங்க மொழியா? கொந்தளித்த மக்கள்.. மன்னிப்பு கேட்ட கூகுள்!

அதிபராக இருந்தால் என்ன தப்புதான் : அதிரடி நடவடிக்கை எடுத்த யூடியூப்!

Admin

உங்கள் தகவலை பேஸ்புக்கிடம் கொடுக்கமாட்டோம் இறங்கிவந்த வாட்ஸ்அப் !நிறுவனம்

Admin

ஜியோவின் இலவச 5ஜிபி டேட்டா… ஆனால் ஒரு சிக்கல்…

Admin

பட்ஜெட் விலையில் சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன்கள்…!

Admin

Leave a Comment