கிராமத்துக்காரி – இது 90களின் உலகம் – பகுதி 4: ”போர்வெல் பேயி!”

SHARE

  • அபிநயா அருள்குமார்

பள்ளிக்கூடத்துக்கு ஒருத்தர் கிளம்பிட்டா, மத்த எல்லாரையும் அவங்க வீட்டுக்கே போய் அழைச்சுக்கிட்டு, எல்லாரும் சேர்ந்துதாள் பள்ளோடம் போகணும்-ன்னு முதல்நாள் பள்ளிக்கூடத்தில் எங்களுக்குள் ஒரு தீர்மானம் போட்டோம்!.

அப்படித்தான் ஒன்னுவிட்ட மாமா பையன கூப்பிட்டு போக நாங்க 4 பேரு போனோம்.. பார்த்தா அவங்க வீடு ஒரே அமர்க்களமா இருந்துச்சு… மாமன் மகனும் பள்ளிக்கூடத்துக்கு கிளம்பள,

நான், “டேய் என்னடா… ஸ்கூலுக்கு வல்லயா?”

அவன், “ம்ம்ம்ம்க்கும் எங்க வீட்டுல, போரு போடுறாங்க…சாமிக்கும்பிட போறோம்”
நான் முறைச்சுக்கிட்டே, பதில் ஏதும் சொல்லாம அவனை பார்த்துக்கிட்டே நின்னேன்… அப்பறம் திடீர்னு, “இரு டீச்சர் கிட்ட மாட்டி விட்றேன்… டிக்டேஷனுக்கு பயந்துதானே வரல!”

அவன் “ இல்லையே நான் படிச்சுட்டேன், நான் அதுக்கெல்லாம் லீவு போடலையே “

உண்மையாகவே அவன் நல்லா படிப்பான், சொல்லப்போனால் எனக்கு பொறாமை அவன் மட்டும் ஜாலியா வீட்டுல இருக்கானேன்னு.

சரி நாமளும் பள்ளிக்கூடம் போயிட்டு வயிறு வலினு லீவுப்போட்டு , அவன் கூட விளையாடுவோமானு யோசிச்சுக்கிட்டே நடக்கும்போது , என் அத்தை “அம்மாடி எல்லாரும், மத்தியானத்துக்கு இங்க சாப்பிட வாங்க”ன்னு சொன்னாங்க. சரினு சொல்லி மனசே இல்லாம பள்ளிக்கூடத்துக்கும் போயாச்சு…

நாங்க பொதுவா பள்ளிக்கூட சத்துணவ விரும்பி சாப்பிடுவதுதான் வழக்கம் என்றாலும் , அத்தை கூப்பிட்ட அந்த கறி விருந்துக்காக வீட்டிற்கு சென்று சாப்பிட தயாரானோம்

மத்தியானம் மணி அடிச்சதும் வேகமா வீட்டை நோக்கி ஓடி வந்தோ,ம் பாருங்க…… நான் பொத்துனு ஒரு பொட்டல்ல விழுந்து , கை உரசி ரத்தம்….. ஹி ஹி காரணம் கிடச்சிருச்சு, மத்தியானத்தோட லீவு என குஷியாகிப்போனேன்!

கூட ஓடி வந்த என் அத்தாச்சிக்கிட்ட “ஏலே அந்திக்கு என் பைய எடுத்துட்டு வந்துறியா, எனக்கு முடியலல வலிக்குது”

”ம்ம்ம்ம்….மருந்து வச்சுக்கிட்டு போவோம்”ன்னு சொல்லி, பக்கத்துல இருந்த பூண்டுச்செடிய பிச்சு, காயத்துல வச்சுக்கிட்டு ”ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் எரியுதே”னு, சொல்லிக்கிட்டே அத்தை வீட்டுக்கு போனால், அங்கு யாருமே இல்லை..

அப்பத்தான் அம்மாச்சி சொல்லுச்சு… ”ஏட்டி எல்லாரும் வயக்காட்டுல நிக்கிறவோ… கறியாக்கி சோறு போடுறவோ போங்கடி அங்க”

நான், சுகந்தி, பைரவி அப்படினு ஒரு அஞ்சு பேருக்கிட்ட வயல்காட்டு திசைய நோக்கி ஓடினோம்… ஒரே பயம்……எல்லாம் உக்காந்து சாப்பிட்டுட்டு இருந்தாங்க…என் மாமன் மகன் , ஓரமா சாய்ந்து கிடந்த பட்ட மரத்துல உக்காந்திருந்தான்… நாங்க தூரமா நின்னு கூப்பிட்டத பார்த்து ஓடி வந்தான்.

”ஏய்ய்ய்….பார்த்தியாடா அது வெளிய வந்துச்சானு?” என அத்தாச்சி கேட்க‌….

”ம்ம்ம்ம்ம் பார்த்தேன் திடு திடுனு …ஊஊஊஊ….அப்டிலாம் கத்துச்சு…”
நான் அப்படியே அதையே வெறிக்க பார்த்துக்கிட்டே, இவன் சொல்லுறதையும் கேட்டேன்..….ஒன்னுமில்லைங்க போர்ல இருந்து வேகமா தண்ணி வந்துச்சு. அதைத்தான் அப்படி வெறிக்க பார்த்தோம்.

காரணம் முன்பு போர்வெல் குழி தோண்டுவதைப் பார்த்தப்போ, அந்த குழிக்குள்ள பெரிய காட்டேரி இருக்கு, பக்கத்துல போனா அது உள்ள இழுத்துக்கும்னு எங்களுக்கு 4 பெரிய மனுசங்க க்ளாஸ் எடுத்திருந்தாங்க!.

அதை நம்பாம ஒரு நாள் அது மூடியிருந்த தட்டியில காதை வச்சுக்கேட்டோம்… தண்ணி ஓடுன சத்தம் எங்களுக்கு அப்படிதான் இருந்துச்சு… அதுல இருந்து அந்த பக்கம் தலை வச்சுக்கூட படுக்குறது இல்லை…

வேறு வழியில்லாத சமயங்களில் அந்த போரில் குளிக்கும் போது பேய் உள்ள இழுத்துருமோனு பயந்ததும் உண்டு… தலைய ரொம்ப நேரம் போர்தண்ணியில காட்டினா மூச்சு முட்டுமே, அதுக்கூட காட்டேரி வேலைனுதான் ரொம்ப நாளா நம்பிட்டு இருந்தேன்.

ஆனால் விவரம் தெரிய தெரிய everything happens for reason அப்படிங்குறது தெளிவா புரிஞ்சது.. சில நேரங்கள்ல பொய் பேயைவிடப் பொல்லாதது!. ஆனால் அன்று அந்தப் பேய் எனக்கு நல்லதுதான் செய்தது.

போர்வெல் பேய் நினைவுதினத்தன்று மற்ற நண்பர்கள் எல்லாம் மதியம் சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு விரைய, நான் கறிச்சோறு, மாமன் மகனோட தனியா விளையாட்டு, காயத்துக்கு மருந்து, டிக்டேஷன் ஸ்கிப்னு ஜாலியாகக் கடந்தேன்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பிக் பாஸ் நாட்கள். நாள் 24 ‘நானும் தலைவர்தான்..!’

சே.கஸ்தூரிபாய்

பிக் பாஸ் நாட்கள். நாள் 27. ‘கமலின் முதல் பஞ்சாயத்து’

இரா.மன்னர் மன்னன்

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி 5: தொழிற் கை முத்திரையின் வகைகள் (9 – 12)

பிக்பாஸ் நாட்கள். நாள்: 6 கமலின் ஆன்லைன் கிளாஸ்…

இரா.மன்னர் மன்னன்

பிக்பாஸ் நாட்கள். நாள் 15: “கொளுத்திப் போட்ட பிரியங்கா!”

இரா.மன்னர் மன்னன்

“தமிழக மக்களுக்கு காத்திருக்கும் பரிசு மழை” – இன்று மெகா தடுப்பூசி முகாம்

Admin

பிக் பாஸ் நாட்கள். நாள்: 18 “பஞ்சபூதங்களும் பஞ்சாயத்துகளும்”

இரா.மன்னர் மன்னன்

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி: 11. 4 வகை எழிற்கை முத்திரைகள்

இரா.மன்னர் மன்னன்

”காக்கும் கையெழுத்து” – மரணத்தின் விலை தொடர். அத்தியாயம் 4.

இரா.மன்னர் மன்னன்

பிக்பாஸ் நாட்கள்: நாள் 2. எல்லாமே கதையா கோப்பால்?

ஜிப்ஸிக்கள் மகிழ்ச்சியாக இல்லை – மகசூல் -பயணத்தொடர் – பகுதி 11

Pamban Mu Prasanth

”எதிர்பாராத விபத்து..!”. மரணத்தின் விலை – தொடர். அத்தியாயம் 3.

இரா.மன்னர் மன்னன்

Leave a Comment