இயக்குனரும் நடிகருமான விஜய் ஆண்டனி, இந்து மதக்கடவுளை புண்படுத்தி விட்டதாக, இந்து மக்கள் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்து மக்கள் கட்சியை சேர்ந்த, மதுரை மாவட்ட தலைவர் சோலைகண்ணன் வெளியிட்ட அறிக்கை:
இந்து கடவுளை அவமதிக்கும் வகையில், காளி படத்தோடு, ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
ஆகவே விஜய் ஆண்டனியின் திரைப்பட தயாரிப்பு நிறுவனம், இந்து மக்களிடம் மன்னிப்பு கேட்டு, போஸ்டரை அகற்ற வேண்டும்.
இல்லையென்றால் வழக்கு தொடரப்படும் திரைப்படம் என்ற பெயரில் இந்து கடவுள்களை தவறாக சித்தரிக்கும் வகையில் போஸ்டர்கள் வெளியிடுவது கண்டிக்கத்தக்கது.
இந்து மத கடவுள்களின் படத்தை போட்டு இழிவுபடுத்துவது போல் மற்ற மதத்தின் கடவுள்களின் படங்களை பிச்சைக்காரன் 2என்ற வார்த்தையை பயன்படுத்தும் துணிவு இருக்கிறதா என கேள்விஎழுப்பியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்