டோக்கியோ பாராலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியா வெள்ளி பதக்கம் வென்றுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 24 ஆம் தேதி முதல் 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த போட்டிகளில் 162 நாடுகளை சேர்ந்த 4,403 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று சிறப்பாக தங்கள் பங்களிப்பை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் டோக்கியோ பாராலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பவினாபென் பட்டேலுக்குவெள்ளி பதக்கம் வென்றார்.
நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பவினா படேல், சீன வீராங்கனை ஜாங்க் மியா மோதினார்.
இந்த போட்டியில் பவினா படேல் 32 என்ற புள்ளிக் கணக்கில் ஜாங்க் மியாவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இந்நிலையில், இன்று இறுதி போட்டியில் சீனாவின் ஜோவ் யிங்கிடம் 3-0 என்ற செட் கணக்கில் தோல்வியை தழுவினார் பவினா.
இதனால் டோக்கியோ பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் இறுதி போட்டியில் இந்தியாவின் பவினா பென் பட்டேல் வெள்ளிப்பதக்கத்தை உறுதி செய்துள்ளார்இதன் மூலம் டோக்கியோ பாராலிம்பிக்ஸில் இந்தியா தன்முதல் பதக்கத்தை பதிவு செய்துள்ளது.