கொரோனா தடுப்பூசிகளை வீணடிப்பதில் தமிழகம் மூன்றாம் இடம்!

SHARE

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை மக்களை திணற வைத்துள்ளது. ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக மக்கள்பெரிதும் அல்லல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அதிக அளவில் தடுப்பூசிகளை வீணடிப்பதில் தமிழகம் இந்தியாவில் மூன்றாம் இடத்தில் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 

15.5 சதவீத கொரோனா தடுப்பூசிகளை வீணடித்து, கொரோனா தடுப்பூசிகளை  வீணடிப்பதில் தமிழகம் இந்திய அளவில் மூன்றாம் இடத்தில் உள்ளது. 37.3 சதவீத தடுப்பூசிகளை வீணடித்து ஜார்க்கண்ட் முதலிடத்தில் உள்ளது. சட்டீஸ்கர் மாநிலம்  30.2 சதவீத தடுப்பூசிகளை வீணடித்து இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தத் தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. 

ஒரு கொரோனா தடுப்பு மருந்து குப்பியை திறக்கும்பட்சத்தில் 10 பேருக்கு அதனை செலுத்த முடியும். ஒரு குப்பியை திறந்து குறிப்பிட்ட நேரத்திற்குள் 10 பேருக்கு செலுத்தவில்லை எனில், மீதமுள்ள மருந்து வீணாகி பயன்படுத்த முடியாமல் போகிறது. அந்த வகையில்தான் அதிகளவு தடுப்பூசிகளை வீணடிப்பதில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. இவ்வகையில் நாடு முழுவதும் 6.3 சதவீத தடுப்பூசிகள் வீணாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறி உள்ளது.

  • பிரியா வேலு

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு… ரெம்டெசிவிர் மருந்து வழங்க கூடாது

Admin

ஊரடங்கில் தளர்வு.. 11 மாவட்டங்களுக்கு கட்டுப்பாடு!

Admin

ஜி.டி.பி. வளர்ச்சி விகிதத்தில் இந்தியா முதல் இடம் பெறும்!: வெளியானது மதிப்பீட்டு அறிக்கை!.

ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியது ரிலையன்ஸ் ரீடெய்ல்..!!

Admin

உங்கள் தகவலை பேஸ்புக்கிடம் கொடுக்கமாட்டோம் இறங்கிவந்த வாட்ஸ்அப் !நிறுவனம்

Admin

ஒரே நாளில் 1000 சிறார்களுக்கு கொரோனா!.

கொரோனா தேவி கோவில இடிச்சுட்டாங்க!. என்ன காரணம் தெரியுமா?

Admin

பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சாவர்க்கர், கோல்வால்கர் வரலாறு… பெருகும் எதிர்ப்பு

Admin

கொரோவால் பெற்றோரை இழந்த குழந்தைகள்: வழிமுறைகள் வெளியிட்ட மத்திய அரசு

கட்சி தொடங்கிய ஆந்திர முதல்வரின் சகோதரி..!

Admin

பேரிடர் ஆபத்தா? இந்த வாட்ஸப் எண்ணில் சொல்லுங்க… தமிழக அரசு அறிவிப்பு

Admin

ட்விட்டர் நிறுவனம் மீது போக்சோ வழக்கு .. காரணம் என்ன?

Admin

Leave a Comment