மத்தியப் பிரதேச மாநிலத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு மாதம் ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும், இலவச கல்வி, இலவச குடும்ப அட்டை, வட்டியில்லா கடன் தரப்படும் என்றும் சிவ்ராஜ் சிங் சவுகான் ஏற்கணவே அறிவித்திருந்தார்.
இந்நிலையில் மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா இரண்டாவது அலையில் இதுவரை மத்தியப்பிரதேசத்தில் 3,500 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் எனவும் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
- கெளசல்யா அருண்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்