தோல்வியும் இல்லை… விக்கெட்டும் இல்லை… தொடர் வெற்றியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

SHARE

நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 16ஆவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. ராயல் சேலஞ்சர்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி, தொடர் வெற்றியைத் தக்க வைத்தது..

வான்கடே, மும்பை

டாஸ் வென்ற கோலி, சஞ்சுவை பேசச் சொல்லி நகர்கிறார். சில வினாடிகளுக்கு பிறகு அட நான் தான டாஸ் ஜெயித்தேன் என்று சுதாரித்து, பிறகு தான் நாங்கள் பெளலிங்கை தேர்வு செய்கிறோம் என்று கூறினார் சஞ்சு. டாஸில் தடுமாறியவர் ஆட்டத்தில் தடுமாறவே இல்லை, இந்த வருடத்தின் ஐபிஎல் சாம்பியன் நாங்கள் தான் என்று இந்த போட்டியையும் சேர்த்து இதுவரை ஆடிய 4 போட்டிகளிலும் தொடர் வெற்றியை கைப்பற்றி, முதல் இடத்தில் இருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

ராயல் சேலஞ்சர்ஸ் அணி இந்த போட்டியில் ரஜத் படிதர்க்கு பதிலாக கேன் ரிச்சர்ட்சன் உடன் களம் இறங்கியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஓபனர்களாக வந்தனர் வோரா மற்றும் பட்லர். முதல் ஓவரில் பட்லர் 2 பவுண்டரி, இரண்டாவது ஓவரில் 2 பவுண்டரி என்று ஆட்டம் தொடங்கியது. 3 வது ஓவரில் சிராஜின் பந்தில் போல்ட் ஆகி அவுட்டானார் பட்லர். அடுத்து 4 வது ஓவரில் ஜேமிசன் பந்தில் பவுண்டரி அடிக்க முயற்சி செய்து கேட்ச் ஆகி வெளியேறினார் வோரா. அடுத்து 5ஆவது ஓவரில் மறுபடியும் சிராஜ் வந்தார், எல்பிடபிள்யூ வில் டக் அவுட் ஆகி சென்றார் மில்லர். பவர்பிளே முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் என்ற நிலையில் இருந்தது ராஜஸ்தான் அணி. 

முக்கிய விக்கெட்டுகள் போனதால் இனி அடித்து தான் ஆக வேண்டும் என்று ரிச்சர்ட்சன் பந்தில் பவுண்டரிகளை விளாசினார் சாம்சன். வாஷிங்கனின் பந்திலும் சிக்ஸ் அடித்து அசத்தினார். அடுத்த பந்தில் சிக்ஸுக்கு தூக்கினார், ஆனால் பந்து மிட் விக்கெட்டில் சென்று  மேக்ஸ்வெல்லின் கைக்கு கேட்ச் ஆனது. ஆட்டத்தின் 8 வது ஓவர் வரை ஃபார்ட்னர்ஷிபே இல்லாமல் அடுத்தடுத்து விக்கெட்கள் வீழ்ந்தன. பிறகு தான் ரியான் மற்றும் டூபே வின் ஃபார்ட்னர்ஷிப் வந்தது. இருவரும் அதிரடியாக ஆடி பந்துகளை பவுண்டரிகளுக்கும், சிக்ஸர்களுக்கும் தெறிக்க விட்டனர். இவர்களது ஃபார்ட்னர்ஷிப்பில்  65 ரன்கள் கிடைத்தது. ஹர்ஷல் பட்டேலின் பந்தில் பவுண்டரி, சிக்ஸர் என தொடர்ந்து அடித்த ரியான் அடுத்த பந்தும் தூக்கி அடிக்க தெர்டு மேனுக்கு சென்று கேட்ச் ஆகி வெளியேறினார். டூபேவும் அதிரடியாக ஆடி 32 பந்துகளுக்கு 46 ரன்கள் எடுத்தார். இதுவே ஐபிஎல்லில் டுபே எடுத்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும். ரிச்சர்ட்சன் பந்தில் தொடர் பவுண்டரி அடிக்க முயன்று, பந்து பேட்டில் சரியாக படாததால்,  எட்ஜில் பட்டு  லாங் ஆன்னில் சென்று  கேட்ச் ஆனது. 

14 வது ஓவரில் வந்த திவாட்டியா, அதிரடியான ஆட்டம் ஆடி 40 ரன்கள் குவித்தார். கடைசி ஓவரில் பட்டேல், மோரிஸ் மற்றும் சக்காரியாவின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதியில் 20 ஓவர்களுக்கு, 177 ரன்கள் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ். டாப் ஆர்டர் பிளேயர்ஸ் இல்லாமல் மிடில் ஆர்டர் பிளேயர்களால்தான் இந்த ஸ்கோர் வந்தது.

178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு அல்வா சாப்பிடுவது போல் இருந்தது. முந்தைய ஆட்டத்தில், சேப்பாக்கத்தில் 200 ரன்களுக்கு மேல் அடித்து வெற்றி பெற்ற அணி ஆயிற்றே. இந்த ரன் எடுக்க நாங்க மட்டும் போதும் மத்தவங்க எல்லாம் ரெஸ்ட் எடுங்கன்னு சொல்லாமல் சொல்லி,  கோலி மற்றும் படிக்கல் ஓபனர்களாக களம் இறங்கி 178 ரன்களையும் எடுத்து விட்டுதான் சென்றார்கள்.

முதல் ஓவரில் எப்போதும் படிக்கல் தான் ஸ்ட்ரைக்கில் நின்று ஆட்டத்தின் முதல் பந்தை அடிப்பார். ஆனால் நேற்று கோலி தான் முதல் பந்துக்காக ஸ்ட்ரைக்கில் நின்று ஆட தயாரானார். காரணம் முந்தைய ஐபிஎல் போட்டிகளில் ஷ்ரேயாஸ் கோபால், கோலியின் விக்கெட்டை எடுத்தார் என்பதற்காக முதல் பந்து வீச்சாளராக கோபாலை அனுப்பினார் சாம்சன். ஆனால் கோலி, அந்த சீன் எல்லாம் இங்கே இல்லை என்று, முதல் ஓவரிலேயே சிக்ஸர் அடித்து கெத்து காட்டினார். 

படிக்கல்லும் தொடர் பவுண்டரி, சிக்ஸர் என சக்காரியா, ரியான் முஸ்தாபிஃசூர் என்று பாரபட்சமின்றி அனைவரின் பந்து வீச்சிலும்   விளாசினார்.  இதனால் கோலி, அவருக்கே அதிக ஸ்ட்ரைக் கொடுத்து அவரை ஊக்கப்படுத்தினார். இதனால் படிக்கல்  தன்னுடைய முதல் சதமும், கோலி அரை சதமும் அடித்து, 17ஆவது ஓவர் முடிய இரண்டு பந்துகள் மீதம் இருக்கும்போதே ஆட்டத்தை முடித்து வெற்றி பெற்றனர்.

– சே.கஸ்தூரிபாய்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர் வெற்றி..! மீண்டும் முதலிடம்!.

சே.கஸ்தூரிபாய்

சர்வதேச யோகா தினம் ..திருக்குறளை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி

Admin

முதலில் தயாரிக்கப்பட்டகோவாக்ஸின் தரமானதாக இல்லை :வல்லுநர் குழு தலைவர் அதிர்ச்சி தகவல்

Admin

மின்னணு வாக்குப்பதிவு எந்திரம்: வரமா? சாபமா?

100 நாடுகளில் பயன்படுத்தப்படும் இந்தியத் தேர்தல் மை: அசரவைக்கும் வரலாறு!

Admin

கிசான் திட்டம்.. ரூ.19,500 கோடியை இன்று விடுவிக்கிறார் பிரதமர் மோடி

Admin

காதல் சுகமானது.. மைதானத்தில் இணைந்த இதயங்கள்.. வைரலாகும் வீடியோ!

Admin

கொரோனா வார்டில் செவிலியரிடம் அத்துமீறிய வாலிபர் … ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்!

Admin

டவ்-தே புயல்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

ரூ.1 பணத்தாளின் விலை ரூ.45 ஆயிரமா? உண்மை என்ன?.

இந்தியாவின் மோசமான மொழி எங்க மொழியா? கொந்தளித்த மக்கள்.. மன்னிப்பு கேட்ட கூகுள்!

ஒலிம்பிக் போட்டியிலிருந்து ஃபெடரர் விலகல் – ரசிகர்கள் அதிர்ச்சி

Admin

Leave a Comment