போக்கோ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் இந்திய விற்பனையில் புது மைல்கல் எட்டியது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
அந்த நிறுவனத்தின் எம்3 ஸ்மார்ட்போன் கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.
முதல் விற்பனையில் மட்டும் போக்கோ எம்3 சுமார் 1.5 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருந்தது.
அதேசமயம் விற்பனை தொடங்கிய ஒரே மாதத்தில் சுமார் 5 லட்சம் யூனிட்களை கடந்திருந்தது.
இந்நிலையில் மூன்று மாதங்களில் போக்கோ எம்3 சுமார் 7.5 லட்சத்திற்கும் அதிகமாக விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்நாப்டிராகன் 663 பிராஸசர், 6 ஜிபி ரேம், 64 ஜிபி ரோம், 6000mah பேட்டரி திறன், 48 எம்பி பிரைமரி கேமரா ஆகிய வசதிகளை கொண்டு ரூ.10,999க்கு விற்பனையாகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்