பெட்ரோல் விலை குறைப்பு நாளை முதல் அமலுக்கு வருவதாக நிதித்துறை செயலளார் கிருஷ்ணன் அறிவித்துள்ளார்
தமிழக சட்டப்பேரவையில் முதல் முறையாக காகிதமில்லா இ- பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2021-2022க்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் சட்டப்பேரவையில் பெட்ரோல் விலை உயர்வு குறித்து பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
தமிழகத்தில் 2.63 கோடி இருசக்கர வாகனங்கள் உள்ளன. இவற்றை அதிகமாக பயன்படுத்துவது நடுத்தர உழைக்கும் வர்க்கத்தினர் தற்போது மத்திய அரசின்பெட்ரோல் விலை உயர்வினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அரசு பெட்ரோல் மீதான வரியை அதிகரித்து, மாநிலங்களுக்கு பகிர்ந்து கொள்ளாமல் மத்திய அரசே பபயன்பெறுவதால் பெட்ரோலின் விலை உயர்வுக்கு மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என கூறினார்
அதே சமயம், பெட்ரோல் விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் வலியை உணர்ந்து, பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரியை 3 ரூபாய் அளவுக்குக் குறைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாகவும்,இது மாநிலத்தில் உள்ள உழைக்கும் வர்க்கத்தினருக்கும் நடுத்தர குடும்பங்களுக்கும் நிவாரணமாக அமையும் என கூறினார்
பெட்ரோல் விலையினை குறைப்பதால் ஆண்டுக்கு ரூ.1,160 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என பேசினார்
.தமிழ்நாடு அரசின் அதிரடி வரி குறைப்பால் பெட்ரோல் விலை மீண்டும் ரூ.100க்கு கீழ் செல்கிறது.இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதிதுறை செயலாளர் கூறியுள்ளார்.