பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளி பாலியல் தொல்லை விவகாரம்… தனியார் பள்ளிகளுக்கு கடிவாளம் போடப்படுமா?.

SHARE

சென்னை கேகே நகரில் உள்ள பிரபல தனியார் கல்வி நிறுவனமான பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர் பாலியல் தொல்லை தந்ததாக எழுந்த குற்றச்சாட்டில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னை, கே.கே.நகர்

கொரோனா பரவல் காரணமாக அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடந்து வருகின்றன. பிரபல தனியார் பள்ளியான பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் 20 ஆண்டுகளாக கணக்குபதிவியல் மற்றும் வணிகவியல் ஆசிரியராக ராஜகோபாலன் பணியாற்றி வந்தார்.  

இந்த ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்பில் அரை நிர்வாணத்துடன் வகுப்புகள் நடத்துவதாக சமீபத்தில் புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து 

அங்கு படிக்கும் இப்போதைய மாணவிகள், மற்றும்முன்னாள் மாணவிகள் பலர், பள்ளியில் தாங்கள் எதிர்நோக்கிய பாலியல் ரீதியான மற்றும் உளவியல் ரீதியான பிரச்சனைகளை இணையத்தில் வெளியிட்டனர். அவை வைரலாக பரவின. 

அந்தக் குற்றச்சாட்டுகளில் இருந்து, ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசுவதுது, பதிலளிக்க முடியாத தர்மசங்கடமான கேள்விகளை கேட்பது , மாணவிகளின் உடல் உறுப்புகள் பற்றி ஆபாசமாக பேசுவது, பள்ளியில் வகுப்புகள் நடந்தபோது மாணவிகளிடம் தவறான நோக்கத்துடன் தொட்டது – போன்ற பல்வேறு கீழ்த்தரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டது தெரிய வந்தது.

20 ஆண்டுகாலமாக ஆசிரியராகப் பணியாற்றும் இவர் மீது 19 ஆண்டுகளாக பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்து வருவதாகக் கூறப்படுகின்றது. இதுகுறித்து பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் புகார்கள் கொடுத்தபோது, உரிய நடவடிக்கை எடுக்காமல் வாய் வார்த்தையில் மட்டும் அவரை கண்டித்துள்ளனர்.

இப்போது கொரோனா விடுமுரை காரணமாக, ஆன்லைன் வகுப்புகள் நடத்தும் போது ராஜகோபாலன் மேலாடை இன்றி அரை நிர்வாணத்துடன் இருப்பதும், மாணவிகளின் வாட்ஸ் அப் நம்பர்களை வைத்துக் கொண்டு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்புவது,ஆபாசமாக கருத்து தெரிவிப்பது, மாணவிகளை சினிமாவுக்கு அழைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளதாக புகார்கள் மூலம் தெரிய வந்தது.

தமிழகத்தில் இந்த சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக எம்பி கனிமொழி, பாமக நிறுவனர் ராமதாஸ் , பாடகி சின்மயி, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் பல்வேறு கல்வியாளர்களும் சமூக வலைதளங்களில் தங்களது ஆதங்கத்தை பதிவிட்டு வெளிப்படுத்தி வருகின்றனர். 

பத்ம சேஷாத்ரி பள்ளியின் புரவலர்களுள் ஒருவரும், பள்ளி உரிமையாளரின் சகோதரருமான ஒய்.ஜி. மகேந்திரன் இந்த சம்பவம் குறித்து பள்ளி டீனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ’மாணவர்களை பாதிக்காத வகையில், உரிய முறையில் விசாரணை நடத்தி ஆசிரியர் மீது தவறு இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தன் தாயார் உருவாக்கிய பள்ளிக்கு எவ்விதமான அவப்பெயரும் ஏற்படாத வகையில் பள்ளி நிர்வாகம் நடந்து கொள்ள வேண்டும்”’ -என தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து பள்ளி நிர்வாகம் ராஜகோபாலனை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த விவகாரத்தில் காவல்துறையினர் ராஜகோபாலனை கைது செய்து போக்சோ சட்டப்பிரிவு, 354(ஏ)- பாலியல் தொல்லை, தொழில் நுட்ப சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

இது குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியின் முதல்வருக்கு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. 

இந்த விவகாரத்தைத் தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான கடுமையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட தமிழக பள்ளிக் கல்வித்துறையும் முடிவு செய்துள்ளது.

கடந்த 2012, ஆகஸ்ட் மாதம், இதே பள்ளியில் நீச்சல் குளத்தில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் போது, பிரபல திரைப்பட இயக்குநரின் ஒரே மகன் ரஞ்சன் என்ற 4ஆம் வகுப்பு மாணவன் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்தான். அப்போது இது பெரிய சர்ச்சையாக உருவெடுத்த போதும், அந்த குற்றச்சாட்டில் யாரும் தண்டிக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத் தக்கது.

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் இதுபோன்ற விதிமீறல்கள் பெரிய அளவில் நடைபெறுகின்றன. பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளி ஆசிரியர் மீதான குற்றச்சாட்டு எழுந்த உடனேயே, வேறுபல பள்ளிகளின் மாணவிகளும் தவறான ஆசிரியர்கள் குறித்து தற்போது பதிவிட்டு வருகின்றனர்.

இதிலிருந்து, பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு உரிய நீதி வழங்கும் அமைப்புகள் இல்லாத காரணத்தாலும், குற்றவாளிகளை பள்ளி நிர்வாகங்களே பாதுகாப்பதாலும் இந்த குற்றச்சாட்டுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பது இல்லை – என்பது புரிகின்றது. பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளி விவகாரத்தால் வெலியே வந்த இந்த பிரச்னையில் ஒரு நிரந்தரத் தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதே மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரின் எதிர்பார்ப்புமாக உள்ளது.

– பிரியா வேலு


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆன்லைனில் மது விற்பனை – அமைச்சர் கூறியது என்ன?

Admin

வேளாண் பட்ஜெட் 2024: `ஒரு கிராமம் ஒரு பயிர்` – ம.பியில் வென்ற திட்டம் தமிழ்நாட்டில் வெல்லுமா?

Pamban Mu Prasanth

பட்டா கத்தியுடனசத்தியம் டிவி அலுவலகத்தில் பயங்கர தாக்குதல்..

Admin

ஜூலை 31 வரை ஊரடங்கு: புதிய தளர்வுகள்என்ன ?

Admin

தமிழ் செம்மல் புலவா் இரா.இளங்குமரனார் காலமானார்!

Admin

சிவசங்கர் பாபாவின் பள்ளியை மூட கோரி பரிந்துரை…!!

Admin

ஆக்ஸிஜன் உற்பத்தி நிறுத்தம்: ஸ்டெர்லைட் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு

Admin

தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.!!

Admin

கொங்குநாடு எதற்கு? நடிகர் வடிவேலு எதிர்ப்பு

Admin

கீழடியில் சர்வதேச தரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!.

Admin

கவனம் ஈர்க்கும் கரூர் மாவட்ட ஆட்சியர் … என்ன செய்தார் தெரியுமா?

Admin

மின்வாரிய ஊழியர்களுக்கு புதிய காப்பீடு திட்டம்: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Admin

Leave a Comment