அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமான சிடிசி, முகக்கவசங்களுக்கான வழிகாட்டுதல்களில் சில தளர்வுகளை அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் கொரோனா தடுப்பு ஊசியின் முழுமையாக தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை போட்டுக்கொண்டவர்கள் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணியத் தேவையில்லை எனவும் திறந்த வெளியில், சிறிய அளவு மக்கள் கூடும் இடங்கள், இசை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், அணிவகுப்புகள் மற்றும் திறந்தவெளியில் நடக்கும் வேறு விதமான பொது நிகழ்வுகளில் முகக்கவசம் இல்லாமல் கலந்து கொள்ளலாம் என அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமான சிடிசி அறிவித்துள்ளது.
அதே நேரம், முடி திருத்தும் நிலையங்கள், அருங்காட்சியகங்கள், திரையரங்கங்கள், திறந்தவெளி அல்லாத இடங்கள், மூடிய வளாகங்கள் மற்றும் அறைகள், அதிக மக்கள் கூடும் இடங்கள் ஆகியவற்றில் முகக்கவசங்கள் கட்டாயம் என்றும் சிடிசி வலியுறுத்தி உள்ளது.
கொரோனா தடுப்பூசியின் இரு டோஸ்களையும் எடுத்துக்கொண்டு இரண்டு வாரங்கள் ஆன நபர்களுக்கே இத் தளர்வுகள் பொருந்தும் எனவும் அளித்துள்ளது. அமெரிக்காவில் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன என்பது இங்கு குறிப்பிடத் தக்கது.
- பிரியா வேலு