பேமிலி மேன் 2 தொடருக்கு தடைவிதிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லையென அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
மக்கள் மத்தியில் பிரபலமான ஃபேமிலி மேன் தொடரின் இரண்டாம் பாகம் கடந்த 3ம் தேதி அமேசானில் வெளியானது. இந்தப் படம் ஈழத்தமிழர்களை தவறாக சித்தரிப்பதாக சர்ச்சை எழுந்தது
இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டணம் தெரிவித்த நிலையில், ஃபேமிலி மேன் 2 தொடரை தடை செய்ய வேண்டும் என இயக்குனர் சேரன், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், இயக்குனர் பாரதிராஜா, வேல்முருகன் உள்ளிட்ட பலர் கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில், ஃபேமிலி மேன் 2 தொடரை தடை செய்வதற்கான அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லையென அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
– மூவேந்தன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்