மணிப்பூரில் கொரோனா தொற்றால் பொதுமக்கள் பீதி அடைவதைத் தடுக்க ஆம்புலன்சுகளில் சைரனை ஒலிக்கவிட வேண்டாம் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா 2ஆவது அலை தாக்கி வருகிறது. தினமும் லட்சக்கணக்கானோருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது. இதனால் பல்வேறு முக்கிய நகரங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்களின் சைரன் ஒலி தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறது. இதனால் பொது மக்கள் அச்சம் அடைவதுடன் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், ஊரடங்கு அமலில் உள்ளதால் வாகன நெரிசலும் இல்லை. எனவே, ஆம்புலன்ஸ் வாகனங்களில் சைரனை இனி ஒலிக்கவிட வேண்டாம் எனவும் சாலைகள் மூடப்பட்டிருந்தாலோ அல்லது வாகன நெரிசல் இருந்தால் மட்டுமே சைரனை ஒலிக்கவிட வேண்டும்” என அம்மாநில அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் நேற்று முன்தினம் நிலவரப்படி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40,683 ஆக அதிகரித்துள்ளது மேலும் 612 பேர் உயிரிழந்துள்ளனர்.
- கெளசல்யா அருண்