புதிய கல்விக் கொள்கையை நாடு முழுவதும் அமல்படுத்துவது தொடர்பான மத்திய அரசுடனான ஆலோசனையை தமிழக அரசு புறக்கணித்துள்ளது.
புதிய கல்விக் கொள்கையை நாடு முழுவதிலும் அமல்படுத்த மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வரும் நிலையில் தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து வருகிறது. புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மாநில செயலாளர்களுடன் ஆலோசனை நடத்துவதற்கு மாறாக மாநில அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று அறிவித்திருந்தார்.
இதுதொடர்பாக தமிழக அரசு எழுதிய கடிதத்திற்கு மத்திய அரசு பதிலளிக்காத நிலையில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் மாநில செயலாளர்களுடன் மேற்கொண்ட ஆலோசனையை, தமிழக அரசு புறக்கணித்துள்ளது.
– கெளசல்யா அருண்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்