ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்தியா முதன்முறையாக 7 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது.
இந்த ஒலிம்பிக் தொடரில் போட்டி நிறைவுபெறும் நாளுக்கு முந்தைய நாளில் ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா 87.58 மீட்டர் தூரம் எறிந்து இந்தியாவிற்காக தங்கப்பதக்கத்தை வென்று புதிய உலக சாதனை படைத்தார்.
தற்போது தங்கமகனாக வந்துள்ள நீராஜ் சோப்ராவிடம் தனியார் செய்தி நிறுவனம் ஒன்று அவரிடம் எடுத்த பேட்டியில், உங்களது வாழ்க்கை வரலாற்றை படமாக்க எடுக்க விரும்பினால் அந்த படத்தில் உங்கள் கதாபாத்திரத்தில் யார் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? என்று கேட்டனர்.
அதற்கு பதிலளித்த நீரஜ் சோப்ரா, எனது வாழ்க்கை வரலாறை படமாக எடுத்தால் அதில் எனது கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு எனது முதல் தேர்வு ரந்தீப் ஹூடாதான். ஒரு வேளை ஹூடா நடிக்கவில்லை என்றால் அக்ஷய்குமார் எனது கதாபத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்திய சினிமாவில் கடந்த சில வருடங்களாக பயோகிராபி பிலிம் எனப்படும் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் பலவும் எடுக்கப்பட்டு, வெற்றி பெற்றுள்ளன. குறிப்பாக, விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் வெற்றிப்படங்களாகவும் அமைந்துள்ளது.
அந்த வகையில் ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து, உடலை குறைப்பதற்காக மைதானம் சென்று, பின்னர் தடகள வீரராக மாறி, ஈட்டி எறிதலில் இந்தியாவிற்காக தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டால் இந்தியாவில் மிகப்பெரிய வெற்றியை பெறும் என கூறப்படுகிறது