டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதன் மூலம், நீரஜ் சோப்ராவின் விளம்பர ஒப்பதங்களின் மதிப்பு அதிகரித்துள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று சாதனை படைத்திருந்தார். இதன் மூலம், அவருக்கு பல கோடி ரூபாய் பரிசு, ஊக்கத்தொகை, சன்மானம் கிடைத்தது.
டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு முன்னதாக விளம்பர ஒப்பதங்களின் மூலம் ஆண்டுக்கு 15 முதல் 25 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டி வந்த நீரஜ் சோப்ரா, தற்போது கோடி கணக்கில் வருமானம் ஈட்ட தொடங்கி உள்ளார்.
அவருடைய விளம்பர ஒப்பந்தங்களின் மதிப்பு தற்போது 100 மடங்கு அதிகரித்து கோடிகளை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை கிரிக்கெட் நட்சத்திரங்கள் மட்டுமே இத்தகைய வருமானத்தை ஈட்டி வந்த நிலையில் தற்போது முதல் முறையாக தடகள விரருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்