நடிகை நயன்தாராவின் தந்தை குரியன் கொடியட்டு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை நயன்தாராவின் தந்தை குரியன் கொடியட்டு உடல்நலக்குறைவால் கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓணம் பண்டிகைக்கு நயன்தாரா காதலர் விக்னேஷ் சிவன் உடன் கொச்சி சென்ற போது நயன்தாராவின் அம்மாவுடன் விக்னேஷ் சிவன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மட்டுமே இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்