குஜராத் மாநிலத்தில் 2 நாட்கள் நடைபெறும் தேசிய கல்வி அமைச்சர்கள் மாநாடு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டை புறக்கணிப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
குஜராத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் நாடு முழுவதும் நடைபெற உள்ளகல்வி அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாட்டு இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை தமிழ்நாடு புறக்கணித்துள்ளது. இந்த மாநாட்டில், தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்பட அதிகாரிகள், ம் கல்வித்துறை செயலாளர்கள் உள்ளிட்ட யாரும் பங்கேற்கவில்லை.
இந்த மாநாட்டில் தேசிய கல்வி கொள்கை குறித்தும், தேசிய அளவில் பாடத்திட்ட மாற்றம் குறித்தும் கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு எதிர்த்து வரும் நிலையில் குஜராத்தில் நடைபெறும் கல்வி அமைச்சர்கள் மாநாட்டை தமிழ்நாடு புறக்கணித்துள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் , “இன்று மற்றும் நாளை குஜராத்தில் புதிய கல்வி கொள்கை குறித்து விவாதிக்க அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் மாநாட்டிற்கு அழைப்பு வந்தது. ஆனால் தமிழக அரசு சார்பில் பங்கேற்க வேண்டாம் என முடிவு செய்துள்ளோம். ஆகவே அதில் நான் பங்கேற்கவில்லை என்றார்.