மக்கள் நீதி மய்யம் கட்சியினரின் எதிர் பதிவுகளுக்கு பிரபல யூடியூப் வலைக்காட்சியான நக்கலைட்ஸ் பதில் அளித்து உள்ளனர்.
அரசியல் நையாண்டி காணொலிகளைத் தொடர்ந்து வெளியிடும் பிரபல யூ டியூப் வலைக்காட்சியான நக்கலைட்ஸ் கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி நடிகர் கமல்ஹாசனின் அரசியலைக் கேலி செய்து ‘உன்னால் முடியாது தம்பி’ என்ற காணொலியை வெளியிட்டனர். இதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் பல வகைகளிலும் கடும் எதிர்வினையாற்றி வருகின்றனர்.
இன்னொரு பக்கம் உன்னால் முடியாது தம்பி காணொலியும் யூ டியூபில் பிரைவேட் காணொலியாக மாற்றப்பட்டு, பொதுமக்கள் பார்க்க இயலாதபடி செய்யப்பட்டு உள்ளது. ஆனாலும் அந்தக் காணொலியின் பல பகுதிகள் சமூக வலைத்தளங்களிலும் வாட்ஸப்பிலும் வைரலாகி வருகின்றன. இதனால் சமூக வலைத்தளங்களில் இது குறித்த செய்திப் பகிர்வுகள் பரவலாகக் காணப்படுகின்றன.
இந்நிலையில் நக்கலைட்ஸ் நிர்வாகம் இந்த சர்ச்சை குறித்த தங்கள் தரப்பு பதிலை தங்கள் அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. இது விளக்கமாகவோ, வருத்தமாகவோ அல்லாமல் பதிலடியாகவே உள்ளது.
நக்கலைட்ஸ்களின் இந்த முகநூல் பதிவும் வைரலாகி வருகின்றது.
https://www.facebook.com/Nakkalites/posts/3920913667974910
நமது நிருபர்.