போட்டி களத்துல மட்டும் தான்… மனசுல இல்ல.. ஒலிம்பிக்கில் தங்கத்தை தாண்டி மின்னிய நட்பு

SHARE

டோக்கியோ ஒலிம்பிக்கில் நட்பின் இலக்கணமாக இரு நாட்டு வீரர்கள் மாறிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஜூலை 23-ஆம் தேதி முதல் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் நண்பர்கள் தினமான நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 1) நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில், கத்தாரின் முதாஜ் எஸ்ஸா பார்ஷிம் என்பவரும் இத்தாலியின் டம்பேரி என்பவரும் தங்கப் பதக்கத்திற்காக கடுமையாகப் போராடினார்கள்.

கடைசியில் ஜன்மார்க்கோ டம்பேரி மற்றும் முட்டாஸ் பார்ஷிம் இருவரும் மட்டும் 2.37 மீட்டருக்கு தாண்டி சமநிலையில் இருந்தனர்.

இதனால் யாருக்கு தங்கப்பதக்கத்தை கொடுப்பது என்ற கேள்வி எழ டை பிரேக்கர் சுற்று தொடங்கியது. இதில் கொடுக்கப்பட்ட மூன்று வாய்ப்புகளில் இருவராலும் சரியாகத் தாண்ட முடியவில்லை.

இதனால் நடுவர் இருவரிடமும் கடைசியாக ஒருமுறை தாண்டுகிறீர்களா? என கேள்வி எழுப்பினார். ஆனால் கடும் கால் வலி காரணமாக போட்டியில் இருந்து பின் வாங்குவதாக டம்பேரி அறிவித்தார்.

உடனடியாக பார்ஷிம் நானும் போட்டியில் இருந்து பின்வாங்கினால் என்ன நடக்கும் என நடுவர்களிடன் கேட்கிறார். அவர்கள் தங்கப்பதக்கத்தை பகிர்ந்தளிக்கும் என தெரிவித்துள்ளனர்.

சற்றும் யோசிக்காமல் போட்டியிலிருந்து விலகுவதாக அவர் அறிவிக்க இருவருக்கும் தங்கப்பதக்கம் பகிர்ந்தளிக்கப்பட்டது.

இந்த வெற்றியை இரண்டு நாட்டு ரசிகர்களை தாண்டி ஒட்டுமொத்த உலகமுமே கொண்டாடுகிறது என்றால் அதற்கு காரணம் நட்பும்..அது அறிந்து வைத்துள்ள வாழ்க்கையின் வலிகளும் தான்…!


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்திய அணியை வழிநடத்த அவரே சிறந்தவர் : தோனியை புகழ்ந்த பிசிசிஐ

Admin

விம்பிள்டன் டென்னிஸ் : சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ஆஷ்லே பார்டி

Admin

மழையால் ரத்தான டிஎன்பிஎல் முதல் ஆட்டம்: ஏமாற்றமடைந்த ரசிகர்கள்

Admin

109 கோல்கள் விளாசிய ரொனால்டோவுக்கு ‘தங்க காலணி’ பரிசு

Admin

கூடிய சீக்கிரம் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் ; ஐசிசி நம்பிக்கை

Admin

கிரிக்கெட் நட்சத்திரங்களுக்கு இணையாக வருமானம் ஈட்டும் நீரஜ் சோப்ரா.!!

Admin

சாதித்த சூப்பர் கிங்ஸ்… பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக தேர்வானது!.

IND VS SL :முதல் ஒருநாள் போட்டி .. இந்திய அணி வெற்றி!

Admin

ஐபிஎல் சூதாட்ட விவகாரம்: தோனி வழக்கு தள்ளிவைப்பு

Admin

இலங்கையை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

Admin

இந்தியா – இலங்கை ஒருநாள் போட்டிகள்: புதிய கால அட்டவணை

கிரிக்கெட் வீரர் பும்ரா திருமணம் – தமிழக நிகழ்ச்சித் தொகுப்பாளரை மணந்தார்

Admin

Leave a Comment