மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் சி.கே.குமரவேல் அந்தக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகினார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி படுதோல்வியைத் தழுவியது. ஒரு இடத்தைக் கூட அதனால் பெற இயலவில்லை. இதனைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சைகளில் கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் முதல் மதுரவாயல் தொகுதி வேட்பாளர் பத்மபிரியா வரை பலரும் கட்சியை விட்டு வெளியேறினர்.
இந்நிலையில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மகேந்திரனும் கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்து உள்ளார். இதனால் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் அடிப்படை அமைப்பே உருக்குலைந்து உள்ளது.
- நமது நிருபர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்