சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய வழக்கில், நடிகை மீரா மிதுனை இரண்டாவது வழக்கில் போலீசார் கைது செய்தனர்.
மிஸ் சவுத் இந்தியா, மிஸ் தமிழ்நாடு என அழகிப் போட்டிகளில் பட்டம் வென்றவர் நடிகை மீரா மிதுன். தான் ஒரு சூப்பர் மாடல் என்றும், தன்னுடைய ஸ்டைலை தான் மற்ற நடிகைகள் பின்பற்றுகிறார்கள் என்றும் சொல்லி கொண்டு வலம் வருபவர்மீரா மிதுன்.
சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர் கடந்தாண்டு அளித்திருந்த புகாரில், மீரா மிதுன் சமூக வலைத்தளங்களில் தனது பெயரையும், புகைப்படத்தையும் தவறாக பயன்படுத்தி தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார் எனக்கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மீரா மிதுன் மீது மீண்டும் கைது செய்யப்பட்டார்.