மேற்கு வங்கத்தின் பவானிபூர் தொகுதியில், முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடவுள்ளார்.
மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தோ்தல் 8 கட்டங்களாக நடத்தப்பட்டது. இதில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி 213 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானா்ஜி தோல்வியடைந்தாா். இருப்பினும், மம்தா பானா்ஜியை திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள், கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக ஒருமனதாக தோ்ந்தெடுத்தனா். அதனடிப்படையில், மம்தா பானர்ஜி தலைமையில் ஆட்சியமைக்கப்பட்டது.
ஆனால் அவர் மீண்டும் எதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் மட்டும் முதலமைச்சராக தொடர முடியும் என்பதால், 2011 மற்றும் 2016ஆம் ஆண்டு தேர்தலில் மம்தா போட்டியிட்டு வென்ற பவானிப்பூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடப் போவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து பவானிப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சோவந்தேப் சட்டோபாத்யாய் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளதால் இந்த தகவல் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
- கெளசல்யா அருண்