கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கைப் பயணம்… – பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை!.

SHARE

நாகப்பட்டினத்திலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 சூன் 3 ல் முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார் கருணாநிதி. அவர் இயற்பெயர் ‘தட்சிணாமூர்த்தி’, பின்னர் அவர் தனது பெயரை ‘கருணாநிதி’ என்று மாற்றிக்கொண்டார்.

தனது பள்ளிப் பருவத்தில் நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்த அவர் வட்டார மாணவர்கள் சிலரின் உதவியுடன் திருவாரூரில் ’தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்’ என்னும் இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பை உருவாக்கினார். இளைஞர்கள் தங்கள் பேச்சாற்றலையும் எழுத்தாற்றலையும் வளர்த்துக்கொள்ள அவ்வமைப்பு உதவியது. அதன் வழியாக மாணவநேசன் என்னும் கையெழுத்துப் பத்திரிகையை வெளியிட்டு இளைஞர்களைத் திரட்டினார், காலப்போக்கில் அந்த அமைப்பு மாநில அளவிலான “அனைத்து மாணவர்களின் கழக”மாக உருப்பெற்றது.

முத்துவேல் கருணாநிதி முரசொலி என்னும் துண்டு வெளியீட்டை 1942 ஆம் ஆண்டில் வெளியிட்டார். பின்னர் 1946 ஆம் ஆண்டு முதல் 1948ஆம் ஆண்டுவரை அதை மாத இதழாக நடத்தினார். 1953ஆம் ஆண்டில் மாத இதழாக சென்னையில் தொடங்கினார். 1960ஆம் ஆண்டில் முரசொலியை நாளிதழாக மாற்றினார்.

இந்தியாவில், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இயங்கிய நீதி கட்சியின் உறுப்பினராக இருந்த அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட கருணாநிதி, தனது 14ஆவது அகவையில், அரசியல், சமூக இயக்கங்களில் முழுமையாக தம்மை ஈடுபடுத்திக்கொண்டார். 

1953ஆம் ஆண்டில் கல்லக்குடியில், ஹிந்தி மொழிக்கு எதிரான போராட்டத்தில் கருணாநிதி கைது செய்யப்பட்டார் அதுவே அவரது அரசியல் வாழ்க்கையில் ஒரு பெரும் திருப்புமுனையாக இருந்து, அவரை ஒரு முக்கிய தலைவராக உருவெடுக்க செய்தது.

1957ல், அவர் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து, முதல் முறையாக மாநில சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

1960 ஆம் ஆண்டில் தி.மு.க. கட்சியில் சேர்ந்து அதன் பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1969 ஆம் ஆண்டு வரை அப்பதவியை வகித்தார்.

1967ல் தமிழ்நாடு முதலமைச்சராக பணியாற்றிய அண்ணாதுரை அவர்கள், திடீர் மரணம் அடைந்ததால், பதவிப் பொறுப்பை தொடர முடியவில்லை.

 1969 ஆம் ஆண்டு முதல்வர் பதவியை மு.கருணாநிதி அவர்கள் ஏற்றார்.

1969-1971 வரை முதன் முறையாகவும், 1971-1976 வரை இரண்டாவது முறையாகவும், 1989-1991 வரை 3ஆவது முறையாகவும், 1996-2001 வரை 4ஆவது முறையாகவும், 2006-2011 வரை 5ஆவது முறையாகவும் என 5 முறை தமிழக முதலமைச்சராக கருணாநிதி இருந்தார்.

1970ல், பாரிஸில் நடந்த உலக தமிழ் மாநாட்டின் ஒரு கெளரவ உயர் பதவியாளராக இருந்தார். 1987ல், அவர் மலேஷியாவில் நடந்த உலக தமிழ் மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.  2010 க்கான ‘உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின்’ அதிகாரபூர்வமான கருப்பொருள் பாடலை உருவாக்கும் பொறுப்பை ஏற்றார்.

கருணாநிதி அவர்கள் மாநிலத்தின் வளர்ச்சிக்காக, கிராமப்புறங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இலவச காப்பீடு திட்டங்கள், தொழில்மயமாக்குதலுக்கான நடவடிக்கைகள் பலவற்றையும் மேற்கொண்டார். ஐ.டி துறையை மாநிலத்தில் வரவேற்கும் விதமாக, அவருடைய பதவி காலத்தில், டைடல் மென்பொருள் பூங்காவை உருவாக்கினார். ஒரகடத்தில் புதிய டிராக்டர் உற்பத்தி பிரிவையும் தொடங்கினார். 

அண்ணாமலை பல்கலைக்கழகம், இவரை கெளரவித்து ‘டாக்டர் பட்டம்’ வழங்கியது மேலும் தமிழ்ப் பல்கலைக்கழகம், அவரது படைப்பான “தென்பாண்டி சிங்கம்” என்ற புத்தகத்திற்கு ‘ராஜா ராஜன் விருதை’ வழங்கியது அதுமட்டுமின்றி

தமிழ்நாட்டு கவர்னரும், மதுரை காமராஜர் பல்கலைக்கழக வேந்தரும் அவருக்கு ‘டாக்டர் பட்டம்’ வழங்கி கௌரவித்தனர். தமிழ்நாடு முஸ்லீம் மக்கள் கட்சி, அவருக்கு “முஸ்லீம் சமூக நண்பர்” என்ற பட்டதை வழங்கியது. 

முழுநேர அரசியல்வாதியாக இயங்கிக்கொண்டிருந்தாலும், தமிழ் திரையுலகிலும் கவனம் செலுத்தி பல்வேறு திரைப்படங்களில் வசனகர்த்தாவாக தனது திராவிட சித்தாந்தங்களை பரப்பினார். இவரது முதல் படமான இராஜகுமாரி 1947ஆம் ஆண்டிலும், கடைசிபடம் பொன்னர் சங்கர் 2011ஆம் ஆண்டிலும் வெளியாகின.

‘தூக்குமேடை’ நாடகத்தின் போது எம். ஆர். ராதா, இவருக்கு ‘கலைஞர்’ என்ற பட்டம் அளித்தார். இன்றும் அப்பெயராலேயே இவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படுகின்றார்.

திருக்குறள் உரை, சங்கத்தமிழ், குறளோவியம் ,தென்பாண்டி சிங்கம், ரோமாபுரி பாண்டியன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட உரைநடை மற்றும் இலக்கிய நூல்களை எழுதியுள்ளார். தூக்குமேடை, மணிமகுடம், நானே அறிவாளி உள்ளிட்ட மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார்.

133அடி உயர திருவள்ளுவர் சிலையை கன்னியாகுமரியில் நிறுவிய பெருமை இவரைச் சேரும். 

முதுமை காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால், சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மு.கருணாநிதி 2018 ஆகஸ்ட் 7ஆம் தேதி காலமானார்.

  • பிரியா வேலு

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு…. கூடுதல் தளர்வுகள் வழங்க பரிந்துரை

Admin

ஆத்தாவுக்கே இந்த நிலைமையா.. கோயில்களை திறக்க சாணிப்பவுடர் குடித்த பெண் !

Admin

அம்பை எனும் அழகியல் கலகக் குரல்! – சாகித்ய அகாதமி விருது பெற்ற பெண்ணியப் படைப்பாளியின் அறிமுகம்.

இரா.மன்னர் மன்னன்

புத்தகங்களில் சாதிப் பெயர்களை நீக்கி அடையாளத்தை சிதைக்காதீர்கள்: ராமதாஸ் அறிக்கை

Admin

வெளியானது மன்னர் மன்னன் எழுதிய ‘இராஜராஜசோழன்’ நூல்…

‘கொங்குநாடு’கோரிக்கை: இலக்கிய ஆதாரத்தை தவறாக பதிவிட்ட வானதி சீனிவாசன் !

Admin

தமிழகத்தில் குறையும் கொரோனா பாதிப்பு!

Admin

இயல் இசை நாடக மன்ற தலைவராக வாகை சந்திரசேகர் நியமனம்!

Admin

ஜூன் 4 ஆம் தேதி ரிசல்ட் : தமிழ்நாட்டுக்கு தேர்தல் எப்போது? வெளியானது தேர்தல் தேதி

Admin

ஊரடங்கு தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு: எவற்றுக்கெல்லாம் அனுமதி?

Admin

வணிக வரித்துறை புகார்களுக்கு பிரத்யேக கட்டுப்பாட்டு அறை : அமைச்சர் மூர்த்தி தகவல்

Admin

கொமதேக நாமக்கல் வேட்பாளர் மாற்றம்… சாதிய பேச்சுதான் காரணமா?

Admin

Leave a Comment