இடது கையின் பின்னே இவ்வளவு இருக்கா? – சர்வதேச இடது கை நபர்கள் தின சிறப்புக் கட்டுரை!.

SHARE

1976 ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி, இடது கை பழக்கமுடையோருக்கான நாளாக சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.  

இடது கை பழக்கமுடையவர்கள் உலக மக்கள் தொகையில் சுமார் 10% பேர் மட்டும்தான். இந்த சிறுபான்மையினர், தங்கள் இடது கை பழக்கத்தால் தாங்கள் சந்திக்கும் நன்மை மற்றும் தீமைகளை பற்றிய விழிப்புணர்வை சமூகத்தில்  ஏற்படுத்துவதற்காகவே  இந்த நாள் கொண்டாடப்படுகிறது. 

சரி எப்படி மனிதர்களில் இடது கை மற்றும் வலதுகைப் பழக்கம் உள்ளவர்கள் என இரண்டு பிரிவுகள் உருவாகின?. இதன் பதில் நமது கைகளில் அல்ல, மூளையில் உள்ளது!.

நம்முடைய மூளை மூன்றாக பிரிக்கப்பட்டு உள்ளது. 1.பெருமூளை 2.சிறுமூளை 3.நீள்வளைய மையவிழையம். பெருமூளையானது இரண்டு அரைக்கோளப் பகுதிகளால் ஆனது. இவற்றில் இடது பக்கத்தில் உள்ள அரைகோளம் நமது உடலில் உள்ள வலது பக்க உறுப்புகளையும், வலது பக்கத்தில் உள்ள அரைகோளம் நமது இடது பக்க உறுப்புகளையும் இயக்குகின்றது.

இதில் பெரும்பாலானோருக்கு இடது பக்க அரைகோளத்தின் ஆதிக்கம் மலோங்கி இருப்பதால், அவர்களுக்கு வலது பக்க உறுப்புகள் சிறப்பாக செயல்படும். அது போலவே வலது பக்க அரைகோளத்தின் ஆதிக்கம் மேலோங்கி இருப்பவர்களுக்கு இடது பக்க உடல் உறுப்புகள் சிறப்பாக செயல்படும்.       

இடது கை பழக்கம் உள்ளவர்கள் ஆங்கிலத்தில் ’சினிஸ்ட்ராலிட்டி’ என்று அழைக்கபடுகின்றனர். இந்த சொல் லத்தின் மொழியில் உள்ள சினிஸ்ட்ரா என்ற சொல்லில் இருந்து உருவானது. சினிஸ்ட்ரா என்றால் இடது பக்கம் என்று அர்த்தம். 

பண்டைய மெசொப்படோபியர்கள், கிரேக்கர்கள், எகிப்தியர்கள் மற்றும் ரோமானியர்கள் இடது கை செயல்பாட்டுக்கு எதிரானவர்களாக இருந்து உள்ளனர். அவர்கள் இடது கைப் பழக்கம் உள்ளவர்களை கடுமையாக தண்டித்தும் உள்ளனர். இதன் பின்னாக உள்ல அவர்களின் எண்ணம், வலது கை ஆசீர்வாதங்களுக்கும், தயவு காட்டுவதற்காகவும் ஒதுக்கியது என்றும். இடது கை சபிப்பதற்கும், தண்டிப்பதற்கும் ஒதுக்கியது என்பதுதான்.

உலகின் மிகப் பெரும்பாலாம கலாசாரங்களில் இடது கை பழக்கங்களை தீயவையாக கருதினர். இஸ்லாத்தில், ஹதீஸ்ஸின் கூற்றுகளில் கூறப்படும் விதிகளில் ஒன்று தனிப்பட்ட சுகாதாரத்திற்கு இடது கையை தான் பயன்படுத்துவது என்பது. இந்த நடைமுறைகளின் மூலம்,  இடது கையானது அசுத்தமானதாக கருதப்பட்டது. 

கிறிஸ்துவத்திலும், ஆதியாகமத்தின் பதிவுகள் ஆதாமின் இடது பக்கத்தில் ஏவாள் தோன்றியதாகக் கூறுகின்றது. இதனால் பெண்களில் சமூக நிலை தாழ்த்தப்பட்டது.

பைபிளில் வரும் மத்தேயு-அத்தியாயமானது, நியாயத் தீர்ப்பு நாட்களில் கடவுள் எப்படி தேசங்களை பிரிப்பார் என்று விவரிக்கிறது. மேய்ப்பன் ஆடுகளை பிரித்து, தன் இரு கரங்களிலும் வைத்துக் கொள்வார். இதில் வலது கரத்தில் உள்ளவர்கள் பரலோக ராஜ்யத்திற்கு அனுப்பபடுவார்கள் என்றும், இடது  கரத்தில் உள்ளவர்கள் தீறாத சாபம், நித்திய நெருப்பு மற்றும் பிசாசின் தேவைகளுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் பைபிள் கூறுகிறது. 

இவற்ருக்கெல்லாம் விதிவிலக்காக, செல்ட்ஸ் என்று குறிப்பிடப்படும் மத்திய ஐரோப்பாவில் இருந்த பழங்குடியினர்  மட்டுமே இடது கை பழக்கங்களை நேர்மறையான எண்ணங்களில் பார்த்தனர். அவர்கள் அதை பெண்மை மற்றும் கருவுருதலுடன் தொடர்புபடுத்தினர். 

இன்று நிறைய பிரபலங்கள் இடது கை பழக்க உள்ளவர்களாக இருக்கின்றனர். அமிதாப்பச்சன், ஒபாமா, சச்சின், ஓஃரா வின்ஃப்ரே, பில் கேட்ஸ், ஏஞ்சலினா ஜோலி எஅ இடதுகையாளர்களாக உள்ள பிரபலங்களின் பட்டியல் மிகப் பெரியது. 

வலது கையில்தான் நல்ல வேலைகளை செய்ய வேண்டும் என்பது இன்றும் நம்மூரில் பொதுவான நம்பிக்கையாக உள்ளது. வலது கையால் போனி செய்வது, வலது கையால் பிரசாதம் வாங்குவது, புது மணப்பெண் வலது கால் எடுத்து வைத்து வருவது, வலது கையால் சாப்பிடுவது, பெண்கள் வலது கையால் சாப்பாடு பரிமாறுவது – என்று இவற்றை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

இரண்டு கைகளும் இரண்டு கால்களும் இயற்கை அனைவருக்கும் கொடுத்தது. ஆனால் அதை அனைவரும் ஒரே மாதிரி தான் பயன்படுத்த வேண்டும் என்பதில்லையே. அவரவர்களுக்கு எது வசதியோ அப்படித்தானே பயன்படுத்த முடியும். ஒருவரின் செளகரியத்தையும், பழக்கத்தையும் மற்றவர் எப்படி தீர்மானிக்க முடியும்? – இதுவும் ஒரு வகையில் அதிகாரத் திணிப்புதான். நாகரிக சமூகங்கள் இப்போது வலது, இடது என்று பேதம் பார்ப்பது இல்லை. ஒரு மனிதன் தனது கைகளில் ஒன்றையே தாழ்வாகக் கருதினால் அவனால் எப்படி சமூகத்தில் சமத்துவத்தைப் பார்க்க முடியும்? – என்ற கேள்வி ஐரோப்பாவில் எழுந்துள்ளது. அது உலகெங்கும் பரவலாக வேண்டும்.

  • சே.கஸ்தூரிபாய்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

டிரம்புக்கு தடை: அதிரடியில் இறங்கிய பேஸ்புக்!

Admin

இந்திய தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு..

Admin

மேதைகளின் மேதை அம்பேத்கர்! – பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை

சிம்பன்சியைக் காதலிக்கும் பெண்!. காதலைப் பிரிக்கும் மிருகக் காட்சி சாலை – விநோத காதல் கதை..!

Admin

ஆப்கானில் ஓசாமாவை அழிப்பதே எங்கள் வேலை .. என்னோடு இந்த போர் முடியட்டும்: அமெரிக்க அதிபர் ஜோபைடன்

Admin

எங்கே செல்லும் இந்தப் பாதை? – அக்னிபாத் கிளப்பும் கேள்விகள்…

ஆப்கானில் உள்ள இந்தியர்கள் விரைவில் மீட்பு: இந்திய வெளியுறவுத்துறை தகவல்

Admin

சீன பொறியாளர்கள் சென்ற பேருந்தில் குண்டு வெடிப்பு…13 பேர் பலி…

Admin

சூயஸ் கால்வாயில் மீண்டும் சிக்கிய சரக்கு கப்பல்…!

Admin

இஸ்ரேலிய நடிகையின் பதிவால் டுவிட்டரில் சர்ச்சை…

உலகின் மிகச் சுவையான மாம்பழ வகை எது?

சார்ஜர் இல்லை: ஆப்பிள் நிறுவனத்துக்கு 20 லட்சம் டாலர் அபராதம் விதித்த பிரேசில்!.

Admin

Leave a Comment