பேரவை அரங்கில் ஜெயலலிதா புகைப்படம் – சரியான நடவடிக்கையா?.

SHARE

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான முதலாவது சட்டப் பேரவைக் கூட்டம் கலைவாணர் அரங்கில் இன்று தொடங்குவதால் கலைவாணர் அரங்கில் ஜெயலலிதா புகைப்படம் வைக்கப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இட நெருக்கடி காரணமாக தமிழக அரசின் சட்டப் பேரவைக் கூட்டம் கலைவாணர் அரங்கில் இன்று தொடங்குகின்றது. அதனால் நேற்றே கலைவாணர் அரங்கில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படம் ‘அமைதி, வளம், வளர்ச்சி’ என்ற அவரது முழக்கத்தோடு வைக்கப்பட்டது.

இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பெரிதும் பாராட்டப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் அரசியல் நாகரிகம் வளர்ந்து வருவதாக மக்கள் பாராட்டி வருகின்றனர். அதே சமயம் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஒருவாரின் புகைப்படத்தை பேரவையில் வைப்பதா? – என்றும் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

முன்னதாகக் கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி தமிழக சட்டப் பேரவையில் மறைந்த முதல்வர் ஜெயலிதாவின் உருவப்படம் முறைப்படி திறந்து வைக்கப்பட்டது. இதனை அப்போதைய பேரவைத் தலைவர் தனபால் திறந்து வைத்தார். தமிழக சட்டப் பேரவையில் 1948ஆம் ஆண்டில் மகாத்மா காந்தியின் படம் திறந்து வைக்கப்பட்டது, பின்னர் மறைந்த முதல்வர்களின் புகைப்படங்கள் திறக்கப்பட்டன. இந்த வரிசையில் ஜெயலலிதாவின் படம் 11ஆவது படம் ஆகும். இந்நிலையில் சட்டப் பேரவையில் வைக்கப்பட்ட படம் சட்ட மன்றக் கூட்டத் தொடரில் அவரது புகைப்படம் இடம்பெறுவது முறையானது ஆகும். இதனை அறிந்தே ஆளும் திமுக அரசு இந்த மரியாதையை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கி உள்ளது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது திமுகவை சேர்ந்த இருவர் அம்மா உணவகத்தின் பெயரை நீக்கிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. பின்னர் அவர்கள் இருவரும் கட்சியில் இருந்து நீக்கவும் பட்டனர். இந்நிலையில் சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைத்ததன் மூலம் ஜெயலலிதா குறித்த தங்கள் நிலைப்பாட்டை திமுக பொதுவெளியில் தெளிவுபடுத்தியுள்ளது.

– பிரியா வேலு


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ரூ 2000 – கொரோனா நிவாரணத் தொகையின் முதல் தவணை இன்று முதல் வழங்கப்படுகின்றது.

தமிழுக்கு அகரமுதலி தந்த வீரமாமுனிவர் பிறந்த நாள் இன்று… யார் இந்த வீரமாமுனிவர்?

இரா.மன்னர் மன்னன்

தமிழகத்தில் ஒரேநாளில் 28,897 பேருக்கு கொரோனா தொற்று – 236 பேர் உயிரிழப்பு

Admin

கீழடி ஆராய்ச்சி வெட்டி வேலை… வெறுப்பைக் கக்கும் துக்ளக்… சரஸ்வதியை தேடுவது என்ன வேலை? கேள்வி கேட்கும் ஆய்வாளர்கள்…

Admin

கோவாக்சின் 2ஆம் தவணைக்கு உடனே பதிவு செய்யவும்!

எச்.ராஜா மீதான குற்றச்சாட்டு விசாரிக்கப்படும்.. பாஜக மாநில தலைவர் எல்.முருகன்..சிக்குவாரா எச் ராஜா?

Admin

கொரோனா கட்டளை மையங்கள் – தொடர்பு எண்கள் வெளியாகின.

சமூக ஆர்வலர் ஸ்டேன் சுவாமி காலமானார்

எம்ஜிஆரை தவறாக சித்தரிப்பதா..? கோபமானமுன்னாள் அமைச்சர்

Admin

ஓ.பி.எஸ் மனைவி மாரடைப்பால் காலமானார்.!!

Admin

கிஷோர் கே சுவாமி அதிரடி கைது.. 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு..

Admin

இறையன்பு ஐ.ஏ.எஸ். இத்தனை நூல்களை எழுதி இருக்கிறாரா ? வியக்க வைக்கும் பட்டியல்!.

Leave a Comment