இறையன்பு ஐ.ஏ.எஸ். இத்தனை நூல்களை எழுதி இருக்கிறாரா ? வியக்க வைக்கும் பட்டியல்!.

SHARE

தமிழக அரசின் தலைமைச் செயலாளராக பொறுப்பேற்று உள்ள இறையன்பு அவர்கள் தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு, ”நான் எழுதியுள்ள நூல்களை எக்காரணம் கொண்டும் எந்த அழுத்தம் வரப்பெற்றாலும், தலைமைச் செயலாளராகப் பணியாற்றும் வரை எந்தத் திட்டத்தின் கீழும் வாங்கக் கூடாது” – என்று கடிதம் எழுதி உள்ளார். அத்தோடு, ”அரசு விழாக்களில் அரசு அலுவலர்கள் யாரும் என்னை மகிழ்விப்பதாக எண்ணி, என்னுடைய நூல்களை அரசு செலவிலோ, சொந்த செலவிலோ பரிசாக பூங்கொத்துகளுக்கு பதில் விநியோகிக்க வேண்டாம்” – என்று அரசு அலுவலர்களுக்கும் அறிவுறுத்தி உள்ளார். இறையன்பு அவர்களின் இந்த நடவடிக்கை சமூக வலைத்தளங்களில் பெரும் பாராட்டைப் பெற்று வருகின்றது.

ஆனால் உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால் இறையன்பு அவர்கள் எழுதிய மிகப் பெரும்பாலான நூல்கள் பள்ளி மாணவர்களும், மக்களும், அரசு அதிகாரிகளும் கட்டாயம் படிக்க வேண்டியவை. மிகத் தரமானவை.

தேர்வுக்கு மாணவர்கள் தங்களை எப்படி தயார் செய்து கொள்ள வேண்டும், பாடங்களை எப்படி உள் வாங்கிப் படிக்க வேண்டும் என்பது குறித்து இவர் எழுதிய ‘படிப்பது பாரம்’  நூலும், ஆட்சிப்பணித் தேர்வுக்கு ஏழை எளிய மாணவர்கள் கூட எப்படி எளிதான முறையில் தயாராகலாம் என்பதை விளக்கும் இவரது ‘ஐ.ஏ.எஸ். வெற்றிப் படிக்கட்டுகள்’ நூலும், புதிய பாடத்திட்டத்திற்கு ஏற்ப ஐ.ஏ.எஸ். தேர்வை மாணவர்கள் எப்படி அணுகுவது என்பதை விளக்கும் ‘ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும்’ நூலும் மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டியவை.

போர் உத்திகளில் இருந்து வெற்றிகளுக்கான சூத்திரங்களை எடுத்து விளக்கிய ‘போர்த் தொழில் பழகு’ நூலும், முதன்மையான இடங்களை எப்படி அடைவது தக்க வைப்பது என்பதை விளக்கும் ‘சிம்மாசன சீக்ரெட்’ நூலும், மனிதர்கள் தங்களைத் தாங்களே அறிய ‘ஏழாவது அறிவு’ மற்றும் ‘உன்னை அறிந்தால்’ ஆகிய நூல்களும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு நிச்சயம் உதவக் கூடியவை.

தற்கொலை தடுப்பு வழிகாட்டி நூலாக இவர் எழுதிய ‘உச்சியில் இருந்து தொடங்கு’ நூலும், தனது நினைவுப் பெட்டகத்தில் இருந்து இவர் எழுதிய ‘காற்றில் கரையாத நினைவுகள் நூலும்’, மனித மூளையை விளக்கும் ’மூளைக்குள் சுற்றுலா’ நூலும் இவரது பரந்த எண்ணத்தையும், சிந்தனைத் திறனையும் பறைசாற்றக் கூடியவை. 

இவரது ‘கேள்வியும் நானே! பதிலும் நானே!!’ – என்றபுத்தகம் மிகவும் வித்தியாசமானது. இந்நூலில் தானே கேட்ட கேள்விகளுக்கு இறையன்பு அவர்கள் அட்டகாசமான பதில்களைக் கொடுத்து உள்ளார். உதாரணமாக சில கேள்வி பதில்கள் கீழே!.

கே: நன்றாகப் பேச எதைக் கற்றுக்கொள்ள வேண்டும்?

ப: மௌனத்தை…

கே: அன்பு முக்கியமா… அறம் முக்கியமா?

ப: அறத்துக்கும் அன்பே ஆதாரம்!

கே:  சோம்பலின் உச்சம் எது?

ப: கையில் இருக்கும் மிட்டாயை வாயில் போட கொட்டாவி வருவதற்காகக் காத்திருப்பது.

கே: துன்பம் வரும்போது சிரிக்க முடியுமா?

ப: பலருக்கும் முடியும்… அடுத்தவர்களுக்கு வரும்போது!

கே: திருமணம் வெற்றியடைய என்ன செய்ய வேண்டும்?

ப: கணவனும் மனைவியும் நண்பர்களைப் போல பழக வேண்டும். ஒரே ரசனையை உள்ளவர்களைவிட … அடுத்தவர் ரசனையை மதிக்கத் தெரிந்தவர்களே மிக நல்ல இணையர்கள்.

கே: பிரபலமானவர்களைப் பற்றி ஏன் வதந்திகள் அதிகமாக உருவாகின்றன?

ப: பிரபலமானவர்கள் மீது மக்களின் இதயத்தில் ஒரு சின்ன பொறாமை இருக்கிறது. அவர்களைப் போல நாமும் பலருக்குத் தெரியவில்லையே என்கிற வருத்தம் மேலிடுகிறது. அவர்களுக்கு அவதூறு நேர்ந்தால்… தாங்கள் அவர்களைவிடப் புனிதமானவர்கள் என்பதைப் போன்ற எண்ணமும் சமாதானமும் ஏற்படுகிறது. அந்தப் பரபரப்பை வைத்தே வதந்திகளைப் பரப்புகிறவர்கள் இயங்குகிறார்கள்.

கே: எந்தப் பஞ்சம் கொடியது?

ப: இயற்கை தவறுவதால் ஏற்படும் பஞ்சத்தை விட… இருப்பவர்கள் பதுக்குவதால் உண்டாகும் பஞ்சம் கொடியது.

இவர் எழுதிய நூல்களில் எண்ணிக்கை சுமார் 102. அவற்றின் மொத்தப் பட்டியல் கீழே இணைக்கப்பட்டு உள்ளது. கல்வித் துறையினரும் அரசு அதிகாரிகளும் தனது நூல்களை வாங்க வேண்டாம் என்று சொன்ன இறையன்பு அவர்கள் மக்களுக்கும் மாணவர்களுக்கும் அவ்வாறு சொல்லவில்லை. எனவே அறிவு வளர்ச்சியில் ஆர்வம் உள்ளவர்கள் கட்டாயம் இந்த நூல்களை வாங்குங்கள்.

 1. இலக்கியத்தில் மேலாண்மை
 2. ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும்
 3. படிப்பது சுகமே
 4. சிற்பங்களைச் சிதைக்கலாமா
 5. பணிப் பண்பாடு
 6. ஆத்தங்கரை ஓரம்
 7. சாகாவரம்
 8. வாய்க்கால் மீன்கள்
 9. நரிப்பல்
 10. சிம்மாசன சீக்ரட்
 11. துரோகச் சுவடுகள்
 12. ஏழாவது அறிவு பாகம்-1
 13. ஏழாவது அறிவு பாகம்-2
 14. ஏழாவது அறிவு பாகம்-3
 15. அரிதாரம்
 16. ஐ.ஏ.எஸ். வெற்றிப் படிக்கட்டுகள்
 17. பூபாளத்திற்கொரு புல்லாங்குழல்
 18. அழகோ அழகு
 19. சின்னச் சின்ன வெளிச்சங்கள்
 20. உள்ளொளிப் பயணம்
 21. ஓடும் நதியின் ஓசை பாகம்-1
 22. ஓடும் நதியின் ஓசை பாகம்-2
 23. மென்காற்றில் விளை சுகமே
 24. முகத்தில் தெளித்த சாரல்
 25. முடிவு எடுத்தல்
 26. நேரம்
 27. காகிதம்
 28. வனநாயகம்
 29. வரலாறு உணர்த்தும் அறம்
 30. ஆர்வம்
 31. ஆணவம்
 32. மருந்து
 33. மழை
 34. திருவிழாக்கள்
 35. இணையற்ற இந்திய இளைஞர்களே
 36. ரயில் பயணம்
 37. விவாதம்
 38. பொறுமை
 39. எது ஆன்மிகம்
 40. வைகை மீன்கள்
 41. பூனாத்தி
 42. வேடிக்கை மனிதர்கள்
 43. முதல் தலைமுறை
 44. நெஞ்சைத் தொட்டதும் சுட்டதும்
 45. வாழ்க்கையே ஒரு வழிபாடு
 46. சறுக்கு மரம்
 47. உழைப்பால் உயர்வோம்
 48. சின்னச் சின்ன மின்னல்கள்
 49. திருப்பாவைத் திறன்
 50. திருவெம்பாவை
 51. அன்புள்ள மாணவனே
 52. உச்சியிலிருந்து தொடங்கு
 53. தர்மம்
 54. இயற்கை
 55. மலர்கள்
 56. முதிர்ச்சி
 57. நட்பு
 58. தரிசனம்
 59. சந்தித்ததும் சிந்தித்ததும்
 60. சுய மரியாதை
 61. இல்லறம் இனிக்க
 62. எது சரியான கல்வி
 63. அச்சம் தவிர்
 64. அவ்வுலகம்
 65. நின்னிலும் நல்லன்
 66. போர்த்தொழில் பழகு
 67. பத்தாயிரம் மைல் பயணம்
 68. வையத் தலைமைகொள்
 69. சிதறு தேங்காய்
 70. வியர்வைக்கு வெகுமதி
 71. மேலே உயரே உச்சியிலே
 72. மனிதன் மாறிவிட்டான்
 73. உன்னோடு ஒரு நிமிஷம்
 74. எப்போதும் இன்புற்றிருக்க
 75. உலகை உலுக்கிய வாசகங்கள்
 76. கேள்வியும் நானே பதிலும் நானே
 77. செய்தி தரும் சேதி
 78. கல்லூரி வாழ்க்கை
 79. நினைவுகள்
 80. பிரிவு
 81. சேமிப்பு
 82. சிக்கனம்
 83. சுத்தம்
 84. தாமதம்
 85. தவம்
 86. தூக்கம்
 87. உடல்
 88. காதல்
 89. கருணை
 90. தனிமை
 91. வாழ்க்கை
 92. வைராக்கியம்
 93. அழகு
 94. நம்பிக்கை
 95. மூளைக்குள் சுற்றுலா
 96. காற்றில் கரையாத நினைவுகள்
 97. நமது அடையாளங்களும் பெருமைகளும்
 98. Ancient Yet Modern – Management Concepts in Thirukkural
 99. Comparing Titans – Thiruvalluvar and Shakespeare
 100. Random Thoughts
 101. Effective Communication : The Kambar Way
 102. Steps to Super Student
 • பிரியா வேலு

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

சங்கராபரணி முதல் தென்பெண்ணை வரை – நூல் மதிப்புரை

வெளியானது மன்னர் மன்னன் எழுதிய ‘இராஜராஜசோழன்’ நூல்…

“தமிழ் மொழி இனிமையான மொழி”.. சட்டப் பேரவையில் ஆளுநர் புகழாரம்

Admin

சைக்கிள் திருட்டு குறித்து முதல்வருக்கு பறந்த புகார் – உடனடியாக மீட்பு

Admin

எம் ஜி ஆர் ஜெயலலிதா பெயர்களை தவிர வேறு யார் பெயரையும் கோஷமிட வேண்டாம் – ஓபிஎஸ் வேண்டுகோள்

Admin

இன்று முதல் ரேஷனில் பொருட்கள் வாங்க மீண்டும் கைரேகை கட்டாயம்

Admin

நீட் ஆய்வுக்குழு அமைத்தது செல்லும் :உயர்நீதிமன்றம் அதிரடி

Admin

கொரோனா நோயாளிகளுக்காக பேருந்துகளில் ஆக்சிஜன் வசதியுடன் படுக்கை – போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிப்பு

ஓபிஎஸ், உதயநிதி வெற்றியை எதிர்த்த வழக்குகள் தள்ளிவைப்பு.!!

Admin

சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு!

Admin

7 பேர் விடுதலையை காங்கிரஸ் ஆதரிக்காது – கே.எஸ்.அழகிரி

சுஷில்ஹரி பள்ளி ஆசிரியை முன் ஜாமீன் கோரி மனு தாக்கல்

Admin

Leave a Comment