ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய டெல்லி!

SHARE

ஐ.பி.எல் லீக்கில் நேற்று நேற்று மும்பை இண்டியன்ஸ் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதிய போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது. 

சேப்பாக்கம், சென்னை

டாஸ் வென்ற மும்பை இண்டியன்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் மற்றும் டிகாக் களம் இறக்கப்பட்டனர். மூன்றாவது ஓவரிலேயே 2 ரன்களோடு ஸ்டாய்னிசின் பந்தில் வெளியேறினார் டிகாக். ரோஹித் ஷர்மா பந்துகளை பார்த்து ஆடி 3 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸரோடு 44 ரன்கள் எடுத்து அமித் மிஷ்ராவின் பந்துவீச்சில் அவுட்டானார். சூர்யகுமார் யாதவ் 24 ரன்கள் கொடுத்து, ஆவேஷ் கானின் பந்தில் வெளியேறினார். மும்பைக்கு ரன் குவிக்க முயற்சித்த  ஹிர்திக் பாண்டியா டக் அவுட்டில் வெளியேறினார். 

அடுத்தடுத்து வந்த க்ருணால் பாண்டியா மற்றும் பொலார்ட்டும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஜெயத் யாதவ் ஓரளவுக்கு நன்றாக ஆடி 23 ரன்கள் எடுத்தார்.  இறுதியில் மும்பை அணி மொத்தம் 137 ரன்களைத்தான் எடுக்க முடிந்தது. அமித் மிஷ்ராவின் சிறப்பக பந்துவீசி 24 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்தார். மும்பை அணியின் தோல்விக்கு இவரே முக்கியக் காரணம். அடுத்து களம் இறக்கிய டெல்லி கேபிடல்ஸ் சுலபமாக வென்றுவிடலாம் என்ற எண்ணத்தோடே ஆட்டத்தைத் தொடங்கினர். ஆனால் ஆட்டம் அவ்வளவு எளிதாக இல்லை.  

டெல்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ப்ரித்வி ஷா மற்றும் தவன் இணையில், ப்ரித்வி ஷா 2ஆவது ஓவரிலேயே விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த ஸ்மித் மற்றும் தவனின் ஃபார்ட்னர்ஷிப்பில் ரன்கள் குவிந்தன. இருவரும் பந்துகளை பவுண்டரிக்கு தெறிக்கவிட்டனர். இந்த ஃபார்ட்ன்ர்ஷிப் பொலார்டின் பந்தில் பிரிந்தது, ஸ்மித் அவுட்டானார்.  தவன் 45 ரன்களில் ராகுல் சஹாரின் பந்தில் வெளியேறினார். அடுத்து வந்த லலித் யாதவ் ஆட்டத்தின் இறுதிவரை ஆடி வெற்றியை கொண்டாடினார். டெல்லி கேபிடல்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

– சே.கஸ்தூரிபாய்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால்அரசு வேலை இல்லை: உ.பி.யில் விரைவில் புதிய சட்டம்

Admin

ஜெயலலிதா தன் குழந்தையை தத்துக் கொடுத்தாரா? உண்மை என்ன?

Pamban Mu Prasanth

சீக்கிரமே பசுவை தேசிய விலங்காக அறிவிக்கணும்: அலாகாபாத் உயர்நீதிமன்றம்

Admin

அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழும் இளம்பெண்… கணவன் பிடியிலிருந்து நழுவிய மனைவி

Admin

கண்ணீருடன் விடைபெற்ற லியோனல் மெஸ்சி – வைரலாகும் வீடியோ!

Admin

அழகிப்போட்டி மேடையில் மியான்மருக்கு உதவி கேட்ட அழகி: துணிச்சலை வியந்த அரங்கம்!.

டிஎன்பிஎல் 2வது ஆட்டம் மழையால் ரத்து: கடுப்பான ரசிகர்கள்

Admin

கணவனே கண்கண்டதெய்வம்..கோவில் கட்டி பூஜை செய்யும் மனைவி.!!

Admin

ஏபி மற்றும் ஏ வகை இரத்தப் பிரிவா? – கொரோனாவிடம் கூடுதல் கவனத்தோடு விலகி இருங்கள்!

‘டிசம்பர் 31 கடைசி நாள்’ – வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

Admin

தமிழகத்தில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா!

Admin

Leave a Comment