இன்ஸ்டாகிராம் செயலியில் வரவுள்ள புதிய அப்டேட் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
வாட்ஸ் அப்பில் செயலி போன்று மக்கள் அதிகம் பயன்படுத்து வலைத்தளமாக இன்ஸ்டாகிராம் மாறியுள்ளது. வாட்ஸ் அப்பில் எப்படி அப்டேட்கள் வழங்கி வருகிறார்களோ.. அவ்வாறு இன்ஸ்டாகிராமிலும் அப்டேட்கள் அள்ளி தெளித்து வருகின்றன.அந்த புதிய அப்டேட் குறித்த தகவல்கள் ட்விட்டரில் வெளியாகி உள்ளது.
இன்ஸ்டாகிராம் செயலியின் ஸ்டோரிக்களுக்கு லைக் கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. இதுவரை இதுபோன்ற அம்சம் வழங்கப்படாமல் இருந்த நிலையில், இன்ஸ்டாகிராமின் டைரெக்ட் மெசேஜ்களுக்கு வரும் ஸ்டோரிக்களுக்கு மட்டும் ரியாக்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
விரைவில் ஸ்டோரிஸ் பக்கத்திலேயே லைக் பட்டன் வழங்கப்பட இருக்கிறது. தற்போதைய தகவல்களில் ஒரே பயனர் ஒரு இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பல்வேறு லைக்குகளை பதிவிட முடியும் என கூறப்படுகிறது.