உங்க உதவிய அமெரிக்கா மறக்காது.. : ஆண்டனி பிளிங்கன்

SHARE

கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியா அளித்த உதவிகளை அமெரிக்கா என்றும் மறக்காது என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இரு நாட்கள் அரசுப் பயணமாக இந்தியா வருகைபுரிந்தார்.

டெல்லியில் இன்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசிய ஆண்டனி இருநாட்டின் ராணுவம், பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பிக்கு பிறகு இரு வெளியுறவு அமைச்சர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, இருநாட்டின் உறவை மேலும் வலுப்படுத்த விரும்புவதாக ஆண்டனி பிளிங்கன் கூறினார்.

மேலும் கொரோனா முதல் அலையில் அமெரிக்கா சிக்கியபோது அதனை எதிர்கொள்ள இந்தியா அளித்த உதவிகளை அமெரிக்கா என்றும் மறக்காது எனக்கூறினார்.

இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து கொரோனா அச்சுறுத்தலுக்கு முடிவுகட்டும் என தெரிவித்தார்.

அதை பேசிய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், கொரோனா 2வது அலையின்போது இந்தியாவிற்கு உதவியதற்காக அமெரிக்காவிற்கு நன்றி தெரிவித்தார்.

தடுப்பூசி உற்பத்திக்கான மூலப்பொருட்கள் விநியோகத்தை தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொடங்கி வைத்திருப்பது வரவேற்கத்தக்கது என கூறிய அவர், அமெரிக்காவுடன் இந்தியா இணைந்து உலகளவில் தடுப்பூசி உற்பத்தி செய்ய கவனம் செலுத்தும் என கூறினார்.

உங்க உதவிய அமெரிக்கா மறக்காது.. நாம எல்லாரும் சேர்ந்து கொரோனாவா அடிச்சு துரத்துவோம்: அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்த பிரச்சினைக்கு காரணமே நீங்கதான் .. ஜோ பைடனை குற்றம் சாட்டும் டிரம்ப்!

Admin

அமைச்சர் துரைமுருகனின்அறிவிப்பு தமிழ்நாட்டை பாலைவனமாக்கி விடும் : பூவுலகின் நண்பர்கள்

Admin

மாஸ்க் போடாத பிரதமருக்கு அபராதம்! – தாய்லாந்தில் சம்பவம்

மைசூரு கூட்டுப் பாலியல் வன்கொடுமை… குற்றவாளிகள் 5 பேரும் திருப்பூரில் கைது

Admin

சாக்கடையில் தான் மலரும்… பாஜக ஆதரவாளரை விளாசிய நடிகர் சித்தார்த்…

Admin

எங்களைத் தாண்டித்தான் சூர்யாவை நெருங்க முடியும் – சீமான் எச்சரிக்கை!

Admin

தமிழக அரசியல் நாகரிகம்… தப்பி ஓடும் எடப்பாடி பழனிசாமி? ஏன்?

Admin

உங்களை மன்னிக்க மாட்டோம்.. கண்டிப்பா உங்களை வேட்டையாடுவோம் – ஆப்கன் குண்டுவெடிப்புக்கு அமெரிக்க அதிபர் கடும் எச்சரிக்கை

Admin

டெல்லியில் திரையரங்குகள் திறக்க அனுமதி!

Admin

கோடநாடு விவகாரம்: சூடு பிடித்தசட்டப்பேரவை விவாதம்!

Admin

காங்கோ நாட்டில் புதிய தங்க மலை! மக்கள் கூடியதால் பரபரப்பு

Admin

15 கோடி மக்களுக்கு கொரோனா… அபாயத்தை உணர்த்தும் புள்ளிவிவரம்.

Leave a Comment