ஐபிஎல் திருவிழா முடிந்த இரண்டு நாட்களில் உலகக்கோப்பை டி20 திருவிழா தொடங்குகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு அந்த நாட்களை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் இரண்டு தரமான சம்பவங்கள் நடந்துள்ளது, ஒன்று நான்காண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அஸ்வின் வருகை மற்றொன்று ரொம்பவே எல்லாரும் விரும்பிய தருணம் . ஆம் இந்திய அணியின் ஆலோசகராக தல தோனி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய ரசிகர்களுக்கு இதைவிட வேறு என்ன வேண்டும். 2019ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை தான் தோனியைக் கடைசியாக இந்திய ஜெர்சியில் பார்த்தது. அதற்குப் பிறகு இப்போது தான் இந்திய அணியுடன் இணையவிருக்கிறார். டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டது ஏன் என பிசிசிஐ தரப்பிடம் ஒரு தனியார் ஊடகம் கேட்டிருக்கிறது.
அதற்குப் பதிலளித்த பிசிசிஐ இந்திய அணியை வழிநடத்தி செல்ல தோனி மட்டும் தான் மிகச் சிறந்தவர். அவரை விட யாராலும் அதை திறமையாகச் செய்துவிட முடியாது. அணியில் அவர் இருப்பதே வீரர்களுக்கு ஊக்கத்தைக் கொடுக்கும். அதை எங்கள் செயலாளர் ஜெய் ஷாவும் விரும்பினார். அதன் படி தோனிக்கு போன் செய்து அவரது விருபத்தையும் தெரிந்து கொண்ட பிறகே இந்த அறிவிப்பை வெளியிட்டோம் எனக் கூறியுள்ளது