கணிதத்துறையில் தமிழின் பங்கு அளப்பரியது. இந்திய கணிதத்தின் பெரும் ஆய்வாளராகக் கூறப்படும் ஆரியபட்டர், கி.பி.5ஆம் நூற்றாண்டு வாக்கில் தமிழகத்தின் திருவெள்ளறையில் தங்கி தமிழ்க் கணிதத்தை சமஸ்கிருதத்திற்கு மொழி பெயர்த்த ஒரு மொழி பெயர்ப்பாளர் மட்டுமே என்பதை ஆய்வாளர் க.நெடுஞ்செழியன் அவர்கள் ’ஆசீவகமும் ஐயனார் வரலாறும்’ என்ற நூலில் விரிவாகவே விளக்கி உள்ளார்.
இதுபோக உலகம் முழுக்க இன்று அரபு எண்கள் – என்ற பெயரில் பயன்படுத்தப்படும் எண்கள் உண்மையில் பண்டைய தமிழ் எண்களே என்பதையும், அரேபியர்கள் அரபு எண்களை ‘இந்து எண்கள் (சிந்து பாயும் நாட்டில் இருந்து வந்த எண்கள்)’ என்றே அழைததையும் ஆய்வாளர் இரா.மன்னர் மன்னன் தனது ‘வரலாற்றில் சில திருத்தங்கள்’ நூலில் விரிவாக ஆதாரங்களுடன் பதிவு செய்துள்ளார்.
இதனால்தான்
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.’ – என வள்ளுவனும்,
‘எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’ – என ஒளவையும் எண்ணுக்கு எழுத்தைவிடவும் அதிக முக்கியத்துவம் கொடுத்து உள்ளனர்.
ஆனால் அந்நியர் ஆட்சியில் தமிழ் தனது கணிதப் பெருமையை இழந்துவிட்டது. தமிழர்கள் தங்களின் பண்டைய எண்களைத் தாங்களே அரபு எண்கள் என அழைக்கும் நிலைக்கு தாழ்ந்து விட்டனர். நாம் நமது பண்டைய எண் முறைகளை அறியாததே இதன் காரணமாகும்.
இந்நிலை மாற, தமிழ் எண்களையும் தமிழ்க் குறியீடுகளையும் கொண்ட கணிப்பான் செயலி (Tamil Calculator App) ஒன்றை தமிழரான வேல் கடம்பன் உருவாக்கி உள்ளார். இதன் பெயர் ‘தமிழ் கணிப்பான்’. இந்த செயலியே தமிழ் எண்கள் மற்றும் குறியீடுகளோடு கூகுள் பிளே ஸ்டோர் தளத்தில் வெளிவந்து உள்ள முதலாவது கணிப்பான் செயலியாகும்!. இது தமிழகத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த செயலி தமிழர்கள் தங்கள் பழைய எண்கள் மற்றும் கணிதக் குறியீடுகளை அடையாளம் காணவும் அன்றாடம் பயன்படுத்தவும் உதவும். இதனை கூகுள் பிளே ஸ்டோர் தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த பெரும் முயற்சி வெற்றிபெற மெய் எழுத்து ஊடகம் வாழ்த்துகிறது!.
இச்செயலியை பற்றிய சிறு குறிப்பு:
முகப்பில் தமிழ் எண்கள் இருக்கும், கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் செய்துகொள்ள அதற்கான குறியீடுகளும் இருக்கும்.
மேலே பாரம்பரிய முறை என்ற பொத்தான் இருக்கும், அதை பயன்படுத்தி, 0 முதல் 9999 வரை உள்ள எங்களை ௰௱௲ ஆகியவை பயன்படுத்தி காணலாம்! ( Negative Integers மற்றும் பதின்ம எண்களை தற்போதைக்கு பாரம்பரிய முறைக்கு மாற்றும் வசதி இல்லை)
இடதுபுறமாக இழுத்தால், வலது புறத்தில் இருந்து தமிழ் பின்னம் (Fractions) குறியீடுகள் வரும் அவற்றையும் பயன்படுத்திக்கொள்ளலாம்!
கணிப்பானில் உள்ள குறியீடுகளின் பொருளை தெரிந்து கொள்ள: https://vaankon.com/tamil-numerals-and-symbols/ – என்ற தளத்தைப் பயன்படுத்தவும்.