பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு ஜாமின் வழங்கியுள்ளது விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம்
பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு சிறப்பு டிஜிபியாக இருந்தவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அந்த பெண் அதிகாரி புகார் அளித்த நிலையில், சிறப்பு டிஜிபி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. மீது 4 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனிடையே இவ்வழக்கு குறித்து விசாரித்து வந்த சிபிசிஐடி போலீசார், 400 பக்க குற்றப்பத்திரிகையை விழுப்புரம் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் இன்று சிறப்பு டிஜிபி ஆஜராகி குற்றப்பத்திரிகை நகலை பெற்றுக் கொண்டார். இதனைதொடர்ந்து வழக்கை ஆகஸ்ட் 16ஆம்தேதிக்கு ஒத்திவைத்து, முன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் முன்னாள் எஸ்பி ஆகிய இருவருக்கும் ஜாமீன் வழங்கி விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.