தமிழகத்தில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிரா, கேரளா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் டெல்டா ப்ளஸ் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் கண்டறியப்பட்ட நிலையில் நாடு முழுவதும் சோதனை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி தமிழகத்தில் மே மாதத்தின் தொடக்கத்தில் 8 பிரிவுகளில் மக்களை வகைப்படுத்தி சுமார் 1000பேரின் மரபணு மாதிரிகள் பெங்களூரில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதன் முதற்கட்ட முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு டெல்டா கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அவர் பரிசோதனை கொடுத்த இடம் சென்னை என்பதால் அவர் சென்னையை சேர்ந்தவர் என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது. அவர் எந்த பகுதியை சேர்ந்தவர், வேறு யாருக்கேனும் டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று உள்ளதா என்பதை வேகமாக கண்டறியும் பணிகளை தொடங்கி இருப்பதாக கூறினார்.