ஏ.ஆர்.ரஹ்மானிடம் ரூ.3 கோடி நஷ்ட ஈடு கேட்டு மனு… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

SHARE

இசை நிகழ்ச்சி தோல்வியடைந்ததாக கூறி ஏ.ஆர்.ரஹ்மானிடம் ரூ.3 கோடி நஷ்ட ஈடு கேட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த 2000ஆம் ஆண்டு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹமானை வைத்து துபாயில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த சென்னையை சேர்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் காளியப்பன் என்பவர் ஏற்பாடு செய்திருந்தார்.

எதிர்பார்த்த அளவுக்கு அந்த நிகழ்ச்சி வெற்றி பெறவில்லை என்றும் இதனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும், மூன்று கோடி ரூபாய் நஷ்ட ஈடாக ஏ.ஆர்.ரஹ்மான் தரவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

நிகழ்ச்சி நடத்தியதால் நஷ்டம் ஏற்பட்டதற்கு பொறுப்பாக முடியாதென்றும், நிகழ்ச்சிக்காக பேசிய தொகையைக்கூட மனுதாரர் தராமல், போலியாக இழப்பீடு கேட்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களுக்கு பின், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிரான நஷ்ட ஈடு வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆட்டோவில் செல்லும் அஜித்: இணையத்தைக் கலக்கும் வீடியோ

Admin

மீண்டும் அரசியலுக்கு வருகிறாரா ரஜினி? வெளியான பரபரப்பு செய்தி?

Admin

நடிகை ஜமுனா வாழ்க்கை வரலாறு படத்தில் தமன்னா?

Admin

நயன்தாராவின் தந்தை மருத்துவமனையில் அனுமதி காரணம் என்ன?

Admin

நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த உத்தரவுக்கு தடை..!!

Admin

நடிகை யாஷிகா மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு..!!

Admin

கமலுடன் இணையும் வெற்றிமாறன்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..

Admin

சிம்புவின் படம் நாளை ஓடிடியில் ரிலீஸ்!

Admin

ஸ்விகியில் ஆர்டர் செய்த நடிகை நிவேதா.. உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாக புகார்! உணவகத்திற்கு தற்காலிகத் தடை

Admin

டெல்லியில் திரையரங்குகள் திறக்க அனுமதி!

Admin

மன அழுத்தத்தில் இருந்து பலரையும் மீட்ட பாடல்: சந்தோஷ் நாராயணன் பெருமை

Admin

குத்துப் பாட்டு மூலம் பாடகியாக அறிமுகமான லாஸ்லியா!

Admin

Leave a Comment