குணச்சித்திர நடிகை பாத்திமா பாபு மருத்துவமனையில் இருப்பது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த 25 வருடங்களாக பல்வேறு தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் பாத்திமா பாபு. பின்பு பட வாய்ப்புகள் கிடைக்க, குணச்சித்திர வேடங்களிலும், தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமானார். இந்த நிலையில், பாத்திமா பாபு ஸ்ட்ரெக்ச்சரில் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோக்களும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது
இதனையடுத்து ரசிகர்கள் கேள்வி எழுப்பியதற்கு, தனது யூடியூப் சேனல் மூலம் விளக்கமளித்துள்ள அவர், சிறுநீரக பிரச்னையால் அவதியடைந்து வந்த அவர் அறுவை சிகிச்சை செய்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.
தற்போது தான் நலமுடன் இருப்பதாகவும், உடல்நலம் சார்ந்த சில டிப்ஸ்களையும் கூறியுள்ளார். பாத்திமா மற்றும் அவரது கணவர் பாபு இருவரும் சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.