- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் வழக்கறிஞருக்கு முன் ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக தளர்வுகளுடன் ஊரடங்கு அமல் படுத்தபட்டுள்ளது இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காரில் வந்த பெண் வழக்கறிஞர் தனுஜா போலீஸாருடன் வழக்கறிஞர் வாக்குவாத்தில் ஈடுபட்டார். இதுகுறித்த வீடியோ இணையதளத்தில் வைரலானது. இதனை தொடர்ந்து சேத்துப்பட்டு பகுதி போக்குவரத்து போலீசார்பெண் வழக்கறிஞர் தனுஜா ராஜன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் பெண் வழக்கறிஞர் தனுஜா முன் ஜாமீன் கோரி இருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதி மன்றம்முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. இந்நிலையில், மீண்டும் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யத வழக்கறிஞர் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பெண் வழக்கறிஞருக்கு முன் ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், அவரது மகள் பயிற்சி வழக்கறிஞர்…
மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்க தடை கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்புகள், பொருளாதார இழப்புகளை மற்றும் இடர்களை கருத்தில் கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு சார்பில் தலா 4,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய – மாநில அரசு ஊழியர்களுக்கு 4,000 ரூபாய் உதவித்தொகை வழங்க தடை விதிக்க கோரி, திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில் உணவுப் பொருள் வழங்கல் துறையின் புள்ளி விவரங்கள்படி, மொத்தம் 2 கோடியே 11 லட்சத்து 87 ஆயிரத்து 496 குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் அனைத்து வகையான பொருட்களும் பெறும் 1,84,11,633 அட்டைகளும்; 18,31,838 வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் குடும்ப அட்டைகளும், 3,84,626 சர்க்கரை குடும்ப அட்டைகளும், 53,864 எந்த பொருளும் வேண்டாம் என்று பெற்ற…
பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள சாமியார் சிவசங்கர் பாபாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா. இவர் அப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் மற்றும் குழந்தைகளிடம்பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனை தொடர்ந்து மாணவிகள் 3 பேர் நேரடியாக அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், டெல்லி காசியாபாத்தில் தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபாவை போலீசார் கைது செய்தனர்.இதையடுத்து செங்கல்பபட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சிவசங்கர் பாபாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும், இதனால் அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதானி நிறுவனங்களின் பங்குகள் திடீர் வீழ்ச்சியடைந்ததை அடுத்து ஆசியாவின் 2ஆவது பணக்காரர் என்ற அந்தஸ்தை கவுதம் அதானி இழந்துள்ளார். அதானி குழுமத்தின் தலைவரான கவுதம் அதானியின் மொத்த சொத்து மதிப்பு 77 பில்லியன் டாலராக உயர்ந்ததையடுத்து, இவர் இந்தியாவிலும், ஆசியாவிலும் இரண்டாவது பணக்காரர் என்ற இடத்தை பிடித்தார். மேலும் உலகளாவிய பணக்காரர் பட்டியலில் 14ஆவது இடத்தில் இருந்தார்.என்.எஸ்.டி.எல்., எனப்படும் தேசிய பங்குகள் வைப்பு நிறுவனம் அதானி நிறுவனங்களில் அதிக முதலீடுகளை கொண்ட மூன்று வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கணக்குகளை முடக்கியதால் அதானி நிறுவனங்களின் பங்குகள் திடீர் சரிவை சந்தித்தது. இதனால் 7 ஆயிரத்து 700 கோடி டாலர்களாக இருந்த அவரது நிகர சொத்து மதிப்பு, 6 ஆயிரத்து 300 கோடி டாலர்களாக குறைந்தது. இதனால் ஆசியாவின் 2ஆவது பணக்காரர் என்ற அந்தஸ்தை கவுதம் அதானி இழந்துள்ளார். அதானியின் இடத்தை ‘நொங்பூ ஸ்பிரிங்’ எனும் பாட்டில் குடிநீர் தொழிலில் ஈடுபட்டுள்ள சீன தொழிலதிபர் ஷுங்…
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றியை தழுவி மு.க ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றார். பதவியேற்று கொண்ட அதே நாளில் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். சபாநாயகராக அப்பாவு, துணை சபாநாயகராக கு.பிச்சாண்டி தேர்வாகினர். இந்நிலையில் தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூன் 21-ஆம் தேதி நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்தது. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி கலைவாணர் அரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.சபாநாயகர் அப்பாவு இன்று காலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினார். அந்த சந்திப்பிற்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அப்பாவு, சட்டப்பேரவை கூட்டத் தொடரை நேரடியாக ஒளிபரப்புவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. அது நிறைவேற்றப்படும். ஜனநாயக முறைப்படி விருப்பு வெறுப்பின்றி அனைவருக்கும் பேச நேரம் ஒதுக்கப்படும் என்று தெரிவித்தார். ஆளுநரை சபாநாயகர் சட்டபேரவைக்கு அழைப்பது வழக்கம். அதன் படி, ஆளுநரை சந்தித்து அழைப்பு விடுத்தேன்…
வணிக வரித்துறை சார்ந்த புகார்களை வணிகர்களும், மக்களும் தெரிவிப்பதற்கு ஏதுவாக பிரத்யேக புகார் எண்ணுடன் கூடிய கட்டுப்பாட்டு அறை விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வணிகர் சங்க பிரதிநிதிகள் மற்றும் வணிகர்களுடன் துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து வணிக வரித்துறை மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். மேலும் இந்த கூட்டத்தில் வணிக வரித்துறை முதன்மை செயலாளர் சித்திக், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரும் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தி, போலி நிறுவனங்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாகவும், வணிகர்கள் புகார் தெரிவிப்பதற்கான கட்டுப்பாட்டு அறையும் விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக தெரிவித்தார்.
தற்போது வரை நீட் தேர்வு நடைமுறையில் உள்ளதாக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். செய்தியாளர் சந்திப்பில் நீட் தேர்வு குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த அவர், அதிமுக ஆட்சியில் தான் நீட் தேர்வுக்கு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி தொடங்கப்பட்டது என்றும், அதனுடைய தொடர்ச்சியாக இப்போது பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். ஆனால் நீட் தேர்வுக்கான பயிற்சி தற்போது தொடங்கப்பட்டது போன்று ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை விடுகிறார் என்று குற்றம்சாட்டிய மா. சுப்பிரமணியன், நீட் தேர்வை ரத்து செய்ய பிரதமரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தார். மேலும் நீட் தேர்வு என்பது தற்போதுவரை நடைமுறையில் உள்ளது. அதனை ரத்துசெய்ய திமுக முயற்சித்து வருவதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறினார்.
உலகப் புகழ் பெற்ற தொழில்நுட்ப பல்கலைக்கழகமான இலினாய் பல்கலைக்கழத்தின் தலைவராக தமிழரான ராஜகோபால் ஈச்சம்பாடி நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள 131 வருட பழமையானதும், உலகப் புகழ்பெற்ற தொழில்நுட்ப பல்கலைக்கழகமுமான இலினாய் பல்கலைக்கழகத்தின் தலைவராக ராஜகோபால் ஈச்சம்பாடி தேர்வு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 53 வயதாகும் ராஜகோபால் ஈச்சம்பாடி திருவாரூரில் பிறந்து, சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை முடித்தவர். அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகக் கல்லூரியான கிண்டி பொறியியல் கல்லூரியில் படித்தவர் ராஜகோபால். இலினாய் பல்கலைக்கழகத்தின் 10ஆவது தலைவராக வரும் ஆகஸ்ட் 16-ல் பொறுப்பேற்கிறார் ராஜகோபால் ஈச்சம்பாடி. இலினொய் பல்கலைக்கழகத்தின் தலைவராக பொறுப்பேற்கும் முதல் இந்தியர் ராஜகோபால் ஈச்சம்பாடி என்பது குறிப்பிடத்தக்கது. தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சியில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சென்னை ஐ.ஐ.டி.யுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக ராஜகோபால் ஈச்சம்பாடி தெரிவித்துள்ளார்.
யூடியூப் சேனல் லைவ் மூலம் சிறுவர் சிறுமியரிடம் ஆபாசமாக பேசி தலைமறைவாக இருந்த டாக்சிக் மதன் கைது செய்யப்பட்டார். தடைசெய்யப்பட்ட விளையாட்டை ஆபாச வர்ணனையுடன் யு டியூபில் நேரலை செய்த பப்ஜி” மதன் தனிப்படையினரால் தருமபுரியில் கைது செய்யப்பட்டுள்ளார். 159 புகார்கள் அவர் மீது பதிவாகியுள்ளன. அவரது மனைவி ஏற்கனவே கைதுசெய்யப்பட்டுள்ளார்
முதல்வர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசி வருகிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், 2 நாள் அரசுமுறை பயணமாக, சென்னையில் இருந்து நேற்று தனி விமானம் மூலம் டெல்லிசென்றார். அங்கு,நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த ஸ்டாலின் தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமர் மோடியிடம் வழங்கி உள்ளார். இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசி வருகிறார். . இந்த சந்திப்பானது மரியாதையின் நிமித்தமான சந்திப்பு எனக் கூறப்படுகிறது. தமிழக முதலமைச்சரான பின், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சோனியாகாந்தி அவர்களை முதல்முறையாக சந்தித்து பேசுகிறார்
