Author: Admin

சிவசங்கர் பாபா மாணவிகளிடம் ஆபாசமாக பேச பயன்படுத்திய இமெயிலை சிபிசிஐடி போலீசார் முடக்கி உள்ளனர். சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா. இவர் அப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் மற்றும் குழந்தைகளிடம்பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனை தொடர்ந்து மாணவிகள் 3 பேர் நேரடியாக அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், டெல்லி காசியாபாத்தில் தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபாவை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து செங்கல்பபட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சிவசங்கர் பாபாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும், இதனால் அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல்நிலை தேறியவுடன் சிவசங்கர் பாபாவை 3 நாட்கள் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரித்தது. குறிப்பாக…

Read More

ட்விட்டர் இந்தியா மீதும் போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ட்விட்டர் இந்தியா நிறுவனம் மீது டெல்லி சைபர் கிரைம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேசிய குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையம் புகார் ஒன்றை டெல்லி சைபர் கிரைம் போலீசாரிடம் அளித்தபுகாரின் அடிப்படையில் சிறுவர்களின் ஆபாச படங்கள் ட்விட்டரில் அதிகம் பகிரப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது இந்த புகாரின் பேரில் தான் டெல்லி சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து தற்போது டுவிட்டர் இந்தியா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  ஏற்கனவே இந்திய அரசுக்கும், ட்விட்டர் நிர்வாகத்திற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உள்ள நிலையில் தற்போது போக்சோ சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Read More

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், எஸ்பிஐ வங்கியில் சேமிப்பு வைப்பு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கில் இருந்து 4 முறை பணம் எடுக்கலாம். அதற்கு மேல் பணம் எடுத்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 15 ரூபாய் மற்றும் ஜி.எஸ்.டி வசூலிக்கப்படும். இந்த நடைமுறை ஜூலை 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. அதேபோல் சேமிப்பு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் ஒரு நிதி ஆண்டில் 10 காசோலைகளை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், அதற்கு மேல் காசோலைகளை பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த கட்டண அமல் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Read More

புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் 8 வயது குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்காக நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரர் டிம் சவுத்தி உதவி செய்துள்ளார். Hollie Beattie என்ற அந்த சிறுமி , Neuroblastoma வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்காக தனது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியின் ஜெர்சியை சவுத்தி ஏலத்தில் விட்டுள்ளார். டிரேட்மி என்ற தளத்தில் இந்த ஏலம் ஜூலை 8 ஆம் தேதி மதியம் 1.45 மணி வரை லைவில் இருக்கும். இந்த ஜெர்சியில் அனைத்து நியூசிலாந்து அணி வீரர்களும் கையெழுத்திட்டுள்ளனர். மேலும் இதில் கிடைக்கும் அனைத்து நிதியையும் அரிய வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள 8 வயது பெண் குழந்தை Hollie Beattie குடும்பத்திடம் அவரது சிகிச்சைக்காக கொடுக்க உள்ளதாக சவுத்தி தெரிவித்துள்ளார்.

Read More

வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்கள் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் உள்ளனர். தமிழில் பொல்லாதவன், ஆடுகளம்,விசாரணை,வடசென்னை, அசுரன் ஆகிய படங்கள் மூலம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இயக்குநர் வெற்றிமாறன் அடுத்ததாக சூரி நடிக்கும் விடுதலை, சூர்யா நடிக்கும் வாடிவாசல் ஆகிய படங்களை இயக்கி வருகிறார். இதனை தொடர்ந்து கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. கமலும் தற்போது இந்தியன்-2, விக்ரம் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

இளைஞர்களின் எனர்ஜி டானிக் ,கொஞ்ச நேரம் பேசினாலும் அவர் நாகர்கோவில்காரர் என்பதை கண்டுபிடித்துவிடலாம். பேச்சில் மண் வாசனை மாறாத சைலேந்திர பாபு ஐபிஎஸ், மிடுக்கான தோற்றத்தில் தோற்றத்தில் மட்டுமல்ல, பணியிலும் உச்சம் தொட்டவர். இன்று தமிழ்நாட்டின் 30-வது சட்டம் ஒழுங்கு டிஜிபி-யாக சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் நியமிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. யார் இந்த சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்.?: சைலேந்திரபாபு ஐ.பி.எஸ். . 34 வருடங்கள் காவல் பணியில் இருக்கிறார். கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர். மதுரையில் உள்ள வேளாண்மை ஆராய்ச்சி கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். 1987 ஆம் ஆண்டு தமிழக கேடரில் ஐ.பி.எஸ் அதிகாரியாக தேர்வு பெற்றார் 1997-ல் சிவகங்கை பகுதியில் மழை, வெள்ளம் கரைபுரண்டு ஒடிக்கொண்டிருந்த நேரம் அப்போது பயணிகளை ஏற்றி வந்த பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக நீர் நிறைந்த கண்மாயில் எதிர்பாராத விதமாக உடைந்து மூழ்கியது. அப்போது காரில் வேறு பணிக்காக பயணித்துக்கொண்டிருந்த சைலேந்திரபாபு. பஸ் மூழ்குவதை…

Read More

தனது மகளின் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார் இயக்குநர் ஷங்கர். இந்தியாவின் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் ஷங்கர். தமிழில் எந்திரன், இந்தியன், அந்நியன் போன்ற பிரம்மாண்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் ஷங்கர். ராம் சரண் படம், அந்நியன் ஹிந்தி ரீமேக், இந்தியன் 2 என தற்போது 3 படங்களை இயக்கி வருகிறார் ஷங்கர். அவரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இளம் கிரிக்கெட் வீரரான ரோகித்தை, ஐஸ்வர்யா திருமணம் செய்து கொண்டார். இதில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நெருங்கிய உறவினர்கள் மற்றும் ஒரு சில முக்கிய பிரபலங்கள் மட்டும் கலந்துகொண்டனர். இந்த திருமண நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் மற்றும் நடிகரும், திமுக எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர். இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் தனது மகளின்…

Read More

குணச்சித்திர நடிகை பாத்திமா பாபு மருத்துவமனையில் இருப்பது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 25 வருடங்களாக பல்வேறு தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் பாத்திமா பாபு. பின்பு பட வாய்ப்புகள் கிடைக்க, குணச்சித்திர வேடங்களிலும், தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து வருகிறார். தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமானார். இந்த நிலையில், பாத்திமா பாபு ஸ்ட்ரெக்ச்சரில் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோக்களும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது இதனையடுத்து ரசிகர்கள் கேள்வி எழுப்பியதற்கு, தனது யூடியூப் சேனல் மூலம் விளக்கமளித்துள்ள அவர், சிறுநீரக பிரச்னையால் அவதியடைந்து வந்த அவர் அறுவை சிகிச்சை செய்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார். தற்போது தான் நலமுடன் இருப்பதாகவும், உடல்நலம் சார்ந்த சில டிப்ஸ்களையும் கூறியுள்ளார். பாத்திமா மற்றும் அவரது கணவர் பாபு இருவரும் சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

தமிழகத்தின் புதிய டிஜிபியாக யார் நியமிக்கப்படுவார் என்ற அறிவிப்பு நாளைக்குள் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி தமிழக டிஜிபியாக பதவியேற்ற திரிபாதி வரும் 30ஆம் தேதி ஓய்வு பெறுகிறார்.இந்நிலையில் தமிழக புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. யுபிஎஸ்சி குழு மற்றும் மத்திய உள்துறை செயலருடன் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, உள்துறை செயலாளர் பிரபாகர் மற்றும் தற்போதைய டி.ஜி.பி. திரிபாதி ஆகியோர் கலந்து கொண்டனர். சைலேந்திர பாபு மற்றும் கரண் சின்ஹா ஆகிய இருவரில் ஒருவரே புதிய டிஜிபியாக நியமிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தமிழகத்தின்புதிய டிஜிபி யார் என்பது குறித்த அறிவிப்பு நாளைக்குள் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read More

ஜூலை 31ஆம் தேதிக்கு பிறகே கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இதனிடையே கடந்த வாரம் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் எவ்வாறு கணக்கீடு செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை தொடங்குவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, ஜூலை 31ஆம் தேதிக்கு பிறகு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என உறுதியளித்தார். மேலும் மதிப்பெண்கள் அறிவிக்கப்படாமல் மாணவர் சேர்க்கை நடத்தினால், கல்லூரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

Read More