Author: Admin

நமது நிருபர் பிரபல பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக்கிற்கு நடக்க இருந்த விவாகரத்து கொரோனாவால் தடுக்கப்பட்டு உள்ள செய்தி வெளியாகி உள்ளது. இந்தித் திரைப்பட உலகின் பிரபல நடிகர் நவாசுதீன் சித்திக். கமல்ஹாசனின் ஹே ராம் உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் இவர் தலைகாட்டி இருந்தாலும், சமீபத்தில் வெளியான ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படம்தான் தமிழ் ரசிகர்களுக்கு இவரை அறிமுகப்படுத்தியது. 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆல்யா என்பவரைத் திருமணம் செய்து கொண்ட சித்திக்கிற்கு 2 குழந்தைகளும் உள்ளனர். சில மாதங்கள் முன்னர் குடும்பப் பிரச்னை காரணமாக மனைவி ஆல்யா நவாசுதீன் சித்திக்கிற்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார். இந்த செய்தி பாலிவுட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் விவாகரத்து முடிவைக் கைவிடுவதாக ஆல்யா அறிவித்து உள்ளார். இதன் பின்னணியில் கொரோனா ஒரு காரணமாக உள்ளதாகவும் அவர் கூறி உள்ளார். இது தற்போது பாலிவுட்டில் மகிழ்ச்சியோடு பகிரப்படும் செய்தியாக மாறி இருக்கின்றது. சில வாரங்களுக்கு முன்பு ஆல்யாவிற்கு…

Read More

நமது நிருபர் ரயில் பயணம் தொடர்பான விசாரணைகள், புகார்கள் அனைத்துக்கும் ஒரே உதவி எண்ணை இந்திய ரயில்வே அறிவித்து உள்ளது. தற்போது ரயிலில் பயணிப்பவர்கள், பயணம் குறித்த தங்கள் குறைகளை தெரிவிப்பதற்கும், விசாரணைக்கும் பல்வேறு தொலைபேசி எண்களைத் தொடர்புகொள்ள வேண்டிய நிலை உள்ளது. இதற்கு பதிலாக அனைத்து குறைகளுக்கும், விசாரணைகளுக்கும் ‘139’ என்ற ஒரே எண்ணைத் தொடர்பு கொள்ளும் வசதி ரயில்வேயில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த எண்ணுக்கு அழைத்தால் இதில் உள்ள தானியங்கி சேவை மூலம் உரிய நிவாரணத்தைப் பெற இயலும். 139 என்ற எண்ணுக்கு அழைப்பவர்கள் அதன் பின்னர் பிற எண்களை அழுத்தி உரிய சேவைகளைப் பெறலாம். அந்த எண்கள்: 1 என்ற எண்ணை அழுத்தி கால் சென்டர் அலுவலருடன் உடனடியாக நேரடி இணைப்பில் பேசலாம். 2 என்ற எண்ணை அழுத்தி பி.என்.ஆர். நிலை, ரெயில் வருகை, புறப்பாடு, கட்டணம், டிக்கெட் முன்பதிவு, ரத்து, விழிப்பு அலாரம்,…

Read More