தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பிரபல சமையல் நிகழ்ச்சியின் நடிகை தமன்னா களமிறங்க உள்ளார்.
தமிழ்,தெலுங்கு போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக திகழும் தமன்னா தற்போது ‘சீட்டிமார்’, ‘ மேஸ்ட்ரோ’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இதனிடையே புகழ்பெற்ற ரியாலிட்டி சமையல் நிகழ்ச்சியான மாஸ்டர் செப் தமிழில் விஜய் சேதுபதி, கன்னடத்தில் கிச்சா சுதீப் தொகுத்து வழங்க ஒளிபரப்பாக உள்ளது.
இதனை நடிகை தமன்னா தெலுங்கு மொழியில் தொகுத்து வழங்க இருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியை ஆண் நடிகர்களே தொகுத்து வந்த நிலையில் தற்போது ஒரே பெண் நடிகையாக தமன்னா களம் இறங்க இருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் எனவும், இதற்காக அவர் அதிகமான ஊதியத்தை பெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்