தமிழக அரசின் கொரோனா தடுப்புப் பணிகளுக்காக நடிகர் விக்ரம் ரூ. 30 லட்சம் வழங்கியுள்ளார்.
அதிகரித்து வரும் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதியுதவி அளிக்குமாறு முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தாா். அதன் அடிப்படையில் திரைத்துறையினர் பலரும் நிவாரண நிதியை வழங்கி வருகிறார்கள்.
இந்நிலையில் தமிழக முதல்வரின் கொரோனா தடுப்பு பொது நிவாரண நிதிக்கு ரூ. 30 லட்சம் வழங்கியுள்ளார் நடிகர் விக்ரம்.
முன்னதாக இன்று நடிகர் ரஜினிகாந்த் முதல்வரின் நிதிக்கு 50 லட்சம் வழங்கி இருந்தது குறிப்பிடத் தக்கது.
- கெளசல்யா அருண்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்