மீண்டும் படப்பிடிப்பில் நடிகர் வடிவேலு கலந்து கொண்டதாக புகைப்படங்கள் வெளியான நிலையில் அவரது தோற்றம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சமீபத்தில் நடிகர் வடிவேலுவுக்கும் இயக்குநர் ஷங்கருக்கும் இடையேயான ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படம் தொடர்பாக எழுந்த சர்ச்சையில் அவர் புதிய படங்களில் நடிக்க தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்தது.
தற்போது அந்த பிரச்சினை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட்டுள்ளதை தொடர்ந்து கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் முழுநேர படப்பிடிப்பில் கலந்து கொள்ள தொடங்கியுள்ளார்.
இதனிடையே சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்க இருக்கும் கம்பேக் படமான நாய்சேகருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதே தலைப்பில் காமெடி நடிகர் சதீஷ், குக் வித் கோமாளி பவித்ரா நடிப்பில் புதிய படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை கிஷோர் ராஜ்குமார் இயக்கியுள்ளார்.
இந்த படப்பிடிப்பை முழுமையாக முடித்துவிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிடும் போது நாய்சேகர் என்ற படத்தின் தலைப்பை வெளியிடலாம் என்று திட்டமிட்டு இருந்தனர். ஆனால் வடிவேலு தன்னுடைய அடுத்த படம் நாய்சேகர் என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வடிவேலு படப்பிடிப்பில் கலந்துக்கொண்டதாக இணையத்தில் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. உடல் மெலிந்து காணப்படும் அவரின் தோற்றத்தைப் பார்த்த பலரும் அவர் மீண்டும் பழைய தோற்றத்தில் உடல்நலம் பெற வேண்டும் என தெரிவித்துள்ளனர்.