தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயன் சிவகுமாரின் மகன்களான சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளனர்.
திரைத்துறையில் மட்டும் கவனம் செலுத்தாது சமூக அக்கறைகளிலும் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் இளைஞர்களுக்கு கல்வி, விவசாயிகளுக்கு உதவி என இருவரும் சேர்ந்து பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.
சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் இருவரும் தனிப்பட்ட முறையில் செல்பி எடுத்துக் கொண்டதில்லை.
ஆனால் சூர்யாவின் 46 வது பிறந்தநாளை முன்னிட்டு கார்த்தி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூர்யாவுடன் 2019ஆம் ஆண்டு முதன் முதலில் எடுத்த செல்பி புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது கிட்டத்தட்ட 4 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை குவித்துள்ளது.