சமூக வலைதளத்தில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த இயக்குநர்கள் குறித்து அவதூறாகப் பேசிய நடிகை மீரா மிதுனுக்கு, மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தி தன்னைத்தானே சூப்பர் மாடல் என்று சொல்லிட்டு வலம் வருபவர் மீரா மிதுன்
தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்தும், அழகி போட்டிகளில் பங்கெடுத்தும் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன்.
அடிக்கடி சர்ச்சையான கருத்துக்களைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தும் மீரா மிதுன் மீது, பல்வேறு வழக்குகளும் பதியப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் தான் கீழ்தரமான செயல்களில் ஈடுபடுவதாகவும், பட்டியல் சமூகத்தை சார்ந்த இயக்குனர்கள், திரை பிரபலங்கள் தன்னுடைய முகத்தை பயன்படுத்துவதாகவும், இவர்களை எல்லாம் சினிமாவை விட்டு துரத்த வேண்டும். பொதுவாக நான் தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றி பேசுவது இல்லை. ஏன் அவர்களைப் பற்றி தவறாகப் பேசுகிற மாதிரி வருகிறது என்றால், எல்லா தாழ்த்தப்பட்ட மக்களும் தப்பான, மோசமான குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று மீரா மிதுன் சமூகவலைத்தளத்தில் பேசிருந்தார்.
இதற்கு பல்வேறு தரப்பினர்கள் கண்டனம் தெரிவித்ததோடு, மீரா மிதுன் மீது வழக்கு தொடரப்பட்டது.
இதனால், மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், வழக்குத் தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு, மீரா மிதுனுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.