அமெரிக்காவின் அலாஸ்கா அருகே நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நேற்று மாலைஅலாஸ்கா தீபகற்பத்தில் 8.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இதனால் அலாஸ்கா பகுதிக்கு சுனாமி எச்சரிக்கையினை .அமெரிக்க அரசு, விடுத்துள்ளது.
அமெரிக்க அரசின் எச்சரிக்கைபடி அலஸ்கா பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதால், அபாயகராமான சுனாமி அலைகள் அடுத்த மூன்று மணி நேரத்தில் சில கடற்கரைகளில் உருவாவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம், பெர்ரிவில்லே என்ற சிறு கிராமத்தின் தென்கிழக்கு பகுதியிலிருந்து 56 மைல் தள்ளி ஏற்பட்டுள்ளது.
இந்த பெர்ரிவில்லே, அலெஸ்காவின் மிகப்பெரிய நகரமான ஆன்கோரேஜ் பகுதியை ஒட்டியதென்பதால், அங்கும் மக்கள் மத்தியில் பதற்றம் நிலவி வருகிறது.
இதற்கு முன் கடந்த அக்டோபரில் 7.5 என்ற அளவில் அலாக்ஸாவின் தெற்கு கடற்கரையில் நிலநடுக்கம் ஏற்பட்டு, சுனாமி ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது விழிப்புடன் செயல்பட்டதால் உயிர்சேதம் தடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.