டோக்கியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து எளிதாக வெற்றி பெற்றுள்ளார்.
இன்று காலை நடைபெற்ற இப்போட்டியில் பிவி சிந்து இஸ்ரேலின் க்செனியா பொலிகர்போவாவை எதிர்கொண்டார்.
தொடக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய சிந்து முதல் செட்டை 21-7 என்ற கணக்கிலும், 2வது செட்டை 21-10 என்ற கணக்கிலும் கைப்பற்றினார்.
என்ன செய்வது என்றே தெரியாமல் க்செனியா நிலைகுலைந்து போகும் அளவிற்கு சிந்துவின் இன்றைய ஆட்டம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்