டிஎன்பிஎல் தொடரின் இரண்டாவது ஆட்டமும் மழையால் ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கிய தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் முதல் போட்டியில் கோவை கிங்ஸ் – சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது மழை பெய்தது.
அதன்பின் மைதானத்தில் எனவே ஈரப்பதத்தை உலரவைக்க எடுத்த முயற்சி பலன் அளிக்காததால் ஆட்டம் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது.
இதனிடையே நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கில்லீஸ் – திருப்பூர் தமிழன் அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.இதன்படி பேட்டிங்கை துவக்கிய திருப்பூர் தமிழன்ஸ் 16.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது.
இதனால் நிறுத்தப்பட்ட ஆட்டம் சிறிது நேரம் கழித்து ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.