பிரபல ஆன்லைன் வர்த்தக தளமான ஃபிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் எனும் தலைப்பில் சிறப்பு விற்பனையை நடத்த உள்ளது.
அதன்படி ஜூலை 25 முதல் ஜூலை 29 வரை நடக்கும் இந்த சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், ஸ்மார்ட் டிவிகள் மற்றும் பல்வேறு சாதனங்களை சலுகை விலையில் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் Flipkart Plus உறுப்பினர்கள் ஜூலை 24 ஆம் தேதி முதல் இந்த சிறப்பு விற்பனையில் கலந்து கொள்ள முடியும்.
இதில் குறிப்பாக ரியல்மி, போக்கோ, விவோ, மோட்டோரோலா ஆகிய நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.