இன்று நெல்சன் மண்டேலா தினம்!. மண்டேலா குறித்து அறியப்படாத 20 தகவல்கள்…

SHARE

உலகில் அதிக மக்களால் சிறந்த தலைவராகப் போற்றப்படுபவர் முன்னாள் தென்னாப்பிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலா. 1918 ஜூலை 18ல் அவர் பிறந்ததால், அந்த தினம் மண்டேலா தினமாகக் கொண்டாடப்படுகின்றது.

தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடி, மக்களாட்சி முறையை கொண்டு வர அமைதியான வழியில் போரிட்டு, அந்த மக்களாட்சி முறையிலேயே தேர்ந்ததெடுக்கப்பட்ட முதல் குடியரசு தலைவர் இவர். 

அதற்கு முன்னதாக, நிறவெறிக்கு எதிராக போராடியதிற்கு 27 ஆண்டுகள் சிறை வாசத்தையும் இவர் பெற்றார். 1990 இல் இவருக்கு கிடைத்த வெற்றி, தென்னாப்பிரிக்காவிற்கும் நிறவெறி ஆட்சியில் இருந்து கிடைத்த மக்களாட்சியாக மலர்ந்தது. 

இதுவரையிலான தகவல்கள் நம்மில் பெரும்பாலானோர் அறிந்தவை.

நெல்சன் மண்டேலா பற்றிய இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்கள் உங்களுக்காக:

1. மண்டேலா முதன் முதலாக தேர்தலில் வாக்களித்த ஆண்டு 1994, அதே தேர்தலில்தான் அவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 76. 

2. இவரே கருப்பின மக்கள் நிறைந்த தென்னாப்பிரிக்காவின் முதல் கருப்பின ஜனாதிபதி ஆவார். 

3. அவரது அமைச்சரவையில் எந்த வித வேறுபாடும் இன்றி வெள்ளை இனத்தை சேர்ந்தவர்களுக்கும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களுக்கும் இடம் கொடுத்தார். 

4. இவரே தென்னாப்பிரிக்காவின் முதல் கருப்பின வழக்கறிஞரும் ஆவார்.   

5. ஒடுக்குமுறை அரசாங்கத்தை கிழித்து ஜனநாயகத்தை நிறுவியதால், மண்டேலா நவீன தென்னாப்பிரிக்காவின் தந்தையாக திகழ்கிறார். 

6. 1993 இல் நிறவெறி ஆட்சியை அமைதியான வழியில் அழித்து, ஜனநாயக ஆட்சியை கொண்டு வந்ததற்காக அமைதிக்கான நோபல் பரிசை பெற்றார். 

7. சட்டம் பயின்ற நெல்சன் மண்டேலா, சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் சிறந்த பணி ஆற்றியதால் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இளைஞர் அணித் தலைவர் ஆனார். 

8. 1962ல் தென்னாப்பிரிக்காவின் நிறவெறி அரசாங்கத்திற்கு எதிராக நாசவேலைகளில் ஈடுபட்டதாக மண்டேலாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. 

9. 27 ஆண்டுகள் ராபன் தீவில் உள்ள சிறையில் மண்டேலாவுக்கு பெரும் கொடுமைகளை இழைத்தது வெள்ளையர்களின் தென்னாப்பிரிக்க அரசு.

9. 1990 இல் அன்று இருந்த தென்னாப்பிரிக்க அரசின் தலைவர் பிரெட்ரிக் வில்லியம் என்பவரால், மண்டேலா விடுதலை செய்யப்பட்டார்.

10. மண்டேலாவின் விடுதலையை மக்கள் அனைவரும் மகிழ்ந்து கொண்டாட, அன்று அவரது  விடுதலை நேரடியாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது. 

11. மண்டேலா விடுதலை பெறும்போது அவருக்கு வயது 71. 

12. 2013 ஆம் ஆண்டு டிசம்பரில், நீண்ட சுவாச நோய்தொற்று காரணமாக அவருடைய 95 வயதில் உயிர் பிரிந்தது. 

13. உலகம் முழுவதும் பல நாடுகள் மண்டேலா இறந்த நாளில் இருந்து, பத்து நாட்கள் வரை தொடர்ந்து தேசிய துக்க நாட்களாக அறிவித்தன. 

14. அரசியலை தவிர மண்டேலாவுக்கு பிடித்தது குத்துச்சண்டை விளையாட்டு. ஏன் பிடிக்கும் என்பதற்கு, குத்துசண்டையில் தங்களை பாதுகாக்க தங்கள் உடலை எவ்வாறு நகர்த்துவது, தாக்குவதற்கும், பின்வாங்குவதற்கும் ஒரு திட்டத்தை எவ்வாறு பயன்படுத்துவது, சண்டையின் மூலம் தங்களை வேகப்படுத்துவது போன்றவற்றால் பிடிக்கும் என்று தன் சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். 

15. இவரது தந்தைக்கு 4 மனைவிகள், 13 பிள்ளைகள், அதில் பள்ளிக்கு சென்று படித்தது நெல்சன் மண்டேலா மட்டும் தான். 

16. நெல்சன் மண்டேலாவின் இயற்பெயர், Rolihlahla Mandela. ஆனால் நெல்சன் என பெயருக்கு முன்னால் உள்ள பெயரை இவருக்கு வைத்தது இவரின் முதல் பள்ளியின் ஆசிரியர். 

17. மண்டேலா மாறுவேடத்தில் தேர்ச்சி பெற்றவர். அவர் பல முறை தன்னை கைது செய்வதில் இருந்து தப்பிக்க ஓட்டுனர், சமையல்காரர், களப்பணியாளர் என வேடமிட்டு இருக்கிறார். 

18. இறுதியாக, அவரை கைது செய்யும் போது அவர் ஓட்டுனர் வேடத்தில் தான் இருந்தார். 

19. மண்டேலா ரகசிய குறிப்புகளை அனுப்புவதில் கைதேர்ந்தவர். ராபன் தீவு சிறையில் உண்ணாவிரத ஏற்பாட்டிற்கு, தீப்பெட்டிகள், அழுக்கு துணிகள் மூலம் குறிப்புகளை அனுப்புவது, கழிப்பறை தொட்டியை தட்டுவது போன்ற செய்கையின் மூலம் சிறையிலும் போராட்டங்களை நிகழ்த்தினார். 

20. உலக வரலாற்றில் அதிக விருதுகளை பெற்றவர் நெல்சன் மண்டேலா. 250க்கும் மேற்பட்ட விருதுகளை அவர் பெற்றார். சோவியத் யூனியனிடமிருந்து லெனின் அமைதிக்கான பரிசைப் பெற்ற கடைசி நபர் நெல்சன் மண்டேலாதான்.

  • செ.கஸ்தூரிபாய்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

இத்துடன் யாகூ செய்திகள் நிறைவடைந்தன..

Admin

ஆப்கானிலிருந்து தப்பிய சிறுமியின் புகைப்படம் வைரல்

Admin

ஆண்களை அலறவிடும் பக்கிங்ஹாம் அரண்மனை: விநோத வரலாறு: பாகம் 1.

Admin

ஊக்கமருந்து சோதனையில் சீனா வீராங்கனை :மீராபாய் சானுக்கு தங்கம் கிடைக்குமா?

Admin

யாழ்ப்பாணம் நூலகம் தீயிட்டு எரிக்கப்பட்ட 41ம் ஆண்டு நினைவேந்தல்

Admin

நிற வெறிப் படுகொலைக்கு ரூ.196 கோடி இழப்பீடு!

Admin

ஆரத்திக்கு பணம்: ஆட்சியரின் நடவடிக்கை திட்டமிட்ட கூட்டுசதியா? அதென்ன 5 கோடி அண்ணாமலை?

Pamban Mu Prasanth

ஆஸ்கரை அதிரவைத்த பெண் இயக்குநர்!.

ஆப்கானில் ஆட்சியமைக்கும் தாலிபான்கள் : பதவி விலகும் அதிபர்

Admin

Justice for Fernanda: கூட்டுப்பாலியல் கொடுமை – தேசிய அவமானத்துக்கு தீர்ப்பு என்ன?

Pamban Mu Prasanth

சூயஸ் கால்வாயில் மீண்டும் சிக்கிய சரக்கு கப்பல்…!

Admin

நான் இந்தியன் என்பது எப்போதும்என்னுள் இருக்கிறது! – சுந்தர் பிச்சை பேச்சு

Admin

Leave a Comment