ரோல்ஸ் ராய்ஸ் கார் நுழைவு வரி விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து நடிகர் விஜய் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
ராய்ஸ் கோஸ்ட்’ காருக்கு, நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு கேட்டு, நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு அத்துடன், விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராத தொகையை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளிக்கும்படியும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி வரி என்பது கட்டாயமாக வழங்க வேண்டிய பங்களிப்பு, நன்கொடை அல்ல, நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும், ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது எனவும்தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகர் விஜயின் ரோல்ஸ் ராய்ஸ் கார் விவகாரம் கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ள நிலையில், நடிகர் விஜயின் வழக்கறிஞர் குமரேசன் கூறுகையில், வரி விலக்கு கேட்பது விஜயின் உரிமை.
அதில், வரி ஏய்ப்பு என்ற வாதத்துக்கு இடமில்லை. இந்த விவகாரம் வேறுவிதமான வாதங்கள் உருவாக்கியுள்ளன. நீதிபதியின் தீர்ப்பில் சில ஆட்சேபகரமான கருத்துகள் உள்ளன. அதனால், இந்த தீர்ப்பு தொடர்பாக மேல்முறையீடு செய்யவுள்ளோம் என்று தெரிவித்தாக கூறப்படுகிறது.
இதற்காக நடிகர் விஜயின் சட்ட குழு மேல்முறையீட்டு மனுவை தயார் செய்து வருவதாகவும், இந்தியா முழுக்க நுழைவு வரிக்கு எதிராக பல்வேறு பிரபலங்கள் வைத்த கோரிக்கைகள், வழக்குகள் குறித்து உதாரணங்களுடன் மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.